🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

Top 6 Best No Hinder-தவெக ஆட்சிக்கு திமுக இடையூறு இல்லை

Read in English / பிற மொழிகளில் படிக்க:

தமிழ்நாட்டில் புதிய அரசாக தவெக ஆட்சி அமைந்தால் அமர்ந்தால் அதற்கு 6 மாதங்களுக்கு திமுக எந்த இடையூறும் தராது என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பது அவருடைய அரசியல் முதிர்ச்சியை மீண்டும் பிரதிபலித்திருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அடிச்சுவடுகளை பின்பற்றி அரசியல் நாகரிகத்தையும், அதன் கண்ணியத்தையும் பின்பற்றும் வகையில் அவர் சொல்லியிருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.

உள்ளடக்கம்

வதந்திகளுக்கு மு.க. ஸ்டாலின் முற்றுப்புள்ளி

தவெக ஆட்சி வரக்கூடாது என்பதற்காக திமுக, அதிமுகவுக்கு ஆதரவு தரப்போவதாக பத்திரிகைகளும், ஊடகங்களும் ஒரு யூகத்தையும், தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒரு அனுதாபத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

தமிழக அரசியல் களத்தில் தற்போது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருப்பது தவெக ஆட்சி (TVK Government) குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் தான்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்திருக்கும் பேட்டி, தமிழக அரசியலில் ஒரு புதிய முதிர்ச்சியான போக்கை (Politics) வெளிப்படுத்தியுள்ளது.

புதிதாக தவெக ஆட்சி அமைந்தால் திமுக எந்தவிதமான இடையூறுகளையும் செய்யாது என்று அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் படித்தீர்களா? Massive 108 TVK Sway: Risk ஆன கூட்டணி?

தவெக ஆட்சி அமைந்தால்… ஸ்டாலின் கோரிக்கை

தவெக ஆட்சி பொறுப்பை ஏற்றால், முதல் 6 மாதங்களுக்கு திமுக தரப்பில் இருந்து எந்த இடையூறும் இருக்காது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இடையூறு செய்ய மாட்டோம் என்ற இந்த நிலைப்பாட்டுக்குப் பின்னால் ஒரு முக்கியமான கோரிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை கிட்டத்திட்ட முதல்வர் பொறுப்பேற்க காத்திருக்கும் விஜய் நிபந்தனையாக ஏற்றுக் கொள்வதும் அவசியமாகிறது.

தற்போதைய திமுக அரசு செயல்படுத்தி வரும் மிக முக்கியமான மக்கள் நலத்திட்டங்களை தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

காலை உணவுத் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை

அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் உலக அளவில் பாராட்டுகளைப் பெற்ற ஒரு திட்டமாகும்.

அதேபோல், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் உதவியாக (Welfare) இருந்து வருகிறது.

இந்த இரண்டு திட்டங்களையும் தவெக ஆட்சி நிர்வாகம் எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடக் கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

திமுக தனது கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், மாற்று அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் ஆட்சி அமைத்தால் இடையூறு செய்யாது என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இந்த அணுகுமுறைதான் திமுகவுக்கு ஒரு அடிப்படை கண்ணியமாகவும் அமைந்திருப்பதை மறுக்க முடியாது. ஜனநாயக நாட்டில் ஒரு கட்சிக்கு அதிக ஆதரவு அளித்திருக்கும் சூழலில் அது ஆட்சியில் அமரும் பட்சத்தில் அதற்கு சிலகாலம் எந்த இடையூறும் தரக் கூடாது என்ற ஜனநாயக மரபை திமுக பின்பற்றுவது பாராட்டுக்குரியது.

அத்துடன் அதை வெளிப்படையாக, ஒரு இக்கட்டான சூழலில் ஆட்சி அமைக்க போராடிக் கொண்டிருக்கும் ஒரு தலைமைக்கு அளிக்கக் கூடிய பேராதரவு என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரமும் தவெக ஆட்சி எதிர்காலமும்

பூர்ணாங்குப்பம் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருப்பதை வைத்து, அந்தக் கட்சி உடையப் போவதாக ஊடகங்கள் செய்திகளைப் பரப்பி வருகின்றன.

அதிமுகவிலிருந்து ஒருசில எம்எல்ஏக்கள் விலகி அதன் மூலம் தவெக ஆட்சி அமைத்தால், அது தவெகவின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது.

நேர்மையான அரசியலை (Honest Politics) எதிர்பார்த்துதான் 35 சதவீத மக்கள் தவெகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அக்கட்சி உணர வேண்டும்.

அந்த கட்சியில் இடம்பெற்றிருக்கும் ஒருசில நிர்வாகிகள் தங்கள் ஆதாயத்துக்காக அரசியல் சூதாட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், அதில் விஜய் சிக்கினால் அவருடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

மக்கள் அவரிடம் ஒரு நேர்மையான அரசியலையும், ஆட்சியையுமே எதிர்பார்க்கிறார்கள்.

இதையும் படியுங்கள் Shocking Doubt on Rahul Gandhi: ஏப்.18 தமிழகம் வருவாரா?

காங்கிரஸ் நிலைப்பாடு

நீண்ட காலம் திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது பதவிக்காகத் தவெக பக்கம் சாய்ந்துள்ளதை திமுக விமர்சித்துள்ளது.

வாக்குப்பதிவு மை கூட இன்னும் அழியாத நிலையில், இப்படி ஒரு கட்சித் தாவல் என்பது மக்களாட்சிக்கு எதிரானது என்று திமுக கருதுகிறது.

பதவிக்காகத் தனது முகத்தை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் பிரமாதமான வாக்கு வங்கி இல்லை. அதன் மதச்சார்பற்ற கொள்கைக்காக மட்டுமே திமுக தொடர்ந்து ஒரு சுமையாக அதை தூக்கிக் கொண்டு திரிந்தது.

இப்போது தானாகவே காங்கிரஸ் கீழே குதித்து வேறொரு வெற்றிக் குதிரையில் சவாரியை தொடங்கியிருக்கிறது.

இதில் இருந்து ஒரு விஷயத்தை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மத்தியில் ஆட்சி அமைக்கும் அல்லது ஆட்சி அமைக்கத் துடிக்கும் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் ஒரே குறிக்கோள் கொண்டவை. அவற்றால் மாநிலங்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம் என்பதுதான்.

காங்கிரஸ் மதச்சார்ப்பற்ற கூட்டணி போர்வையை போர்த்திக் கொண்டு நாடு முழுவதும் வலம் வரும் போக்குக்கு எதிர்காலத்தில் ஒரு முடிவு கட்டும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இதன் மூலம் அடுத்து வரக்கூடிய மக்களவை தேர்தலின்போது நாடு தழுவிய மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கருணாநிதி வழியில் ஸ்டாலின்

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அரசியல் அணுகுமுறையை நினைவூட்டும் வகையில் ஸ்டாலினின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் நலனுக்காக ஒரு அரசை இடையூறு இல்லாமல் செயல்பட விடுவது என்பது ஒரு மிகச்சிறந்த அரசியல் முதிர்ச்சியாகும்.

இந்த அணுகுமுறை தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இருந்தாலும், தவெக ஆட்சி அமைந்தால், அவர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா என்ற சந்தேகம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் எழுப்பப்பட்டு வருகிறது.

குதிரைப் பேரம் மூலம் கட்சித் தாவியவர்களை வைத்து ஆட்சி அமைப்பதை விட, மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சி நடத்துவதே ஒரு சிறந்த கட்சிக்கு அழகு. தமிழக வெற்றிக் கழகம் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க முடியாத சூழலில், மீண்டும் எந்த விதத்திலாவது திமுக மீது பழியை சுமத்தி அனுதாப அலையை பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

ஆனாலும் அதன் முதல்கட்ட முயற்சியான அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு என்ற ஒரு வதந்தியை பரப்பி அனுதாபத்தை தேட நடந்த முயற்சி தோல்வியை சந்தித்ததிருக்கிறது.

இந்த விடியோ சில கசப்பான உண்மைகள் சொல்கிறது… தீவிர திமுக, தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பார்க்க வேண்டாம்.


தவெக ஆட்சி அமைந்தால் திமுக இடையூறு செய்யுமா?

இல்லை, முதல் 6 மாதங்களுக்கு திமுகவினரால் எந்த இடையூறும் இருக்காது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக விதித்துள்ள நிபந்தனைகள் என்ன?

காலை உணவுத் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

திமுக – அதிமுக கூட்டணி வதந்தி உண்மையா?

இல்லை, திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கும் செய்தி தவறு என்பதை ஸ்டாலினின் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி வெளிப்படுத்தியுள்ளது.

தவெகவின் வாக்கு சதவீதம் எவ்வளவு?

சுமார் 35 சதவீத மக்கள் தவெகவுக்கு நேர்மையான அரசியலை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உண்மை என்ன?

கட்சி உடைய வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் கூறினாலும், இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது சந்தேகமானதே.

காங்கிரஸ் கட்சி மீது திமுகவின் விமர்சனம் என்ன?

பதவிக்காகத் தவெக பக்கம் காங்கிரஸ் சாய்ந்து பழைய முகத்தை காட்டியுள்ளதை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

ஸ்டாலின் யாரைப் பின்பற்றி அரசியல் செய்கிறார்?

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அரசியல் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதை அவரது நடவடிக்கைகள் மூலம் அறிய முடிகிறது.

தவெகவின் எதிர்காலத்திற்கு எது சூனியமாக அமையும்?

கட்சித் தாவி வரும் எம்எல்ஏக்களை வைத்து ஆட்சி அமைப்பது தவெகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?

முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.

மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தப்படுமா?

புதிதாக அமையும் அரசு திமுக அரசின் திட்டங்களையும் தொடர வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது.

#MKStalin #TVK #TamilNaduPolitics #ADMK #DMK #PoliticalAnalysis #MithiranNews

    ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

    🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *