Read in English / பிற மொழிகளில் படிக்க:
ஒரு சிறிய கிராமத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியிருந்தது. வாக்குச் சாவடிக்கு வெளியே நின்ற இளைஞர்கள், “இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் கூடிப்போச்சு… மிகப்பெரிய மாற்றம் தமிழ்நாட்டில் வரப்போகிறது” என உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தனர்.
அருகில் நின்றிருந்த கணக்குப் பிள்ளை தாத்தா அவர்களைப் பார்த்து மெலிதாக சிரித்தார். “தம்பிகளா, போன முறை வந்த அதே ஆளுங்க தான் இப்பவும் வந்து ஓட்டு போட்டிருக்காங்க… அதோட புதுசா உங்களை மாதிரி வாக்குரிமை பெற்ற ஒருசில பேரும் இப்போது சேர்ந்திருக்காங்க. அவ்வளவுதான்.
ஆனால் கடந்த வருஷம் வரைக்கும் செத்தவங்க, ஊரை விட்டு போனவங்க பேரையெல்லாம் லிஸ்ட்ல இருந்து தூக்குனதால வழக்கமான எண்ணிக்கையில் ஓட்டு போட்டிருந்தாலும் கூட சதவீதம் அதிகமானது போன்ற ஒரு மாய தோற்றத்தை நீங்க பாக்குரீங்க… என்றார்.
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsதாத்தா சொன்ன அந்த ஒற்றை வரியில்தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு சதவீதம் தேர்தல் கணக்கும் அடங்கியிருக்கிறது.
இதுவே மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததன் பின்னணியில் உள்ள மிகப்பெரிய ரகசியம்.
நேற்று நடந்த தேர்தலைத் தொடர்ந்து ஊடகங்களில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் உண்மையான புள்ளிவிவரங்களை ஆராய்ந்தால் மட்டுமே இதில் உள்ள வாக்குப்பதிவு சதவீதம் கணித மாயாஜாலம் நமக்கு புரியவரும்.
மித்திரன் செய்திகள் இந்த தரவுகளை ஆழமாக அலசி ஆராய்ந்துள்ளது. எண்கள் எவ்வாறு நம்மை ஏமாற்றுகின்றன என்பதை இனி விரிவாகப் பார்க்கலாம்.

உள்ளடக்கம்
அதிகரித்த வாக்குப்பதிவு சதவீதம் உண்மையா?
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் முந்தைய தேர்தல்களை விட இம்முறை அதிக மக்கள் வாக்களித்துள்ளதாக ஒரு பிம்பம் உருவாகியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதைப் படித்தீர்களா? Threat Hope & Trap: தொகுதி மறுசீரமைப்பு தெற்கு இணையுமா?
ஆனால் தேர்தல் ஆணையத்தின் விரிவான புள்ளிவிவரங்களை சீர்தூக்கிப் பார்க்கும்போதுதான் வாக்குப்பதிவு சதவீதம் உண்மை நிலை தெரியவருகிறது. இங்கு புதிய வாக்காளர்கள் பெருமளவில் திரண்டு வந்துவிடவில்லை.
மாறாக, வாக்காளர் பட்டியலில் இருந்த போலி வாக்குகளை பதிவு செய்வதற்கு காரணமாக இருந்த இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டதே இந்த மாயத்தோற்றத்திற்கு காரணம். இதை ஒரு எளிய கணக்கீடு மூலம் நாம் மிக எளிதாக வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்துள்ளதை புரிந்துகொள்ள முடியும்.
எண்கள் குறையும்போது சதவீதத்தின் அளவு தானாகவே அதிகரிக்கும் என்பது அடிப்படை கணிதம். இதையே அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமான அலையாக சித்தரிக்க முயல்கின்றன.
பாமரர்களுக்கான எளிய கணக்கீடு: 100 எப்படி 80 ஆனது?
சிறு பிள்ளைகளுக்கும் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு எளிய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு ஊரின் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 100 பேர் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
இந்த 100 பேரில் இறந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் என சுமார் 20 பெயர்கள் இடம் பெற்றிருந்தன. கடந்த முறை நடந்த தேர்தலில் இந்த 100 பேரில் 70 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
100 பேரில் 70 பேர் வாக்களித்ததால், கடந்த தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதம் சரியாக 70 ஆக பதிவானது. இதுதான் பழைய கணக்கு.
இதையும் படியுங்கள்: (Delimitation) SHOCKING! தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு பாதிப்பு
இப்போது தேர்தல் ஆணையம் அந்த 20 போலி பெயர்களையும், இறந்தவர்கள் பெயர்களையும் நீக்கிவிட்டது. இதனால் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 100-ல் இருந்து 80 ஆக குறைந்துவிட்டது.
தற்போது இந்த புதிய 80 வாக்காளர்கள்தான் இந்த தேர்தலின் 100 சதவீத வாக்காளர்களாக மாறுகிறார்கள். நேற்றைய தேர்தலிலும் கடந்த முறையை போலவே அதே 70 பேர் மட்டுமே வந்து வாக்களித்தனர்.
முன்பு 100-ல் 70 என்பது 70 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 80 பேரில் 70 பேர் வாக்களித்த காரணத்தால், அது கணக்கீட்டின்படி 87.5 சதவீதமாக எகிறிவிட்டது.
ஆட்கள் என்னவோ அதே 70 பேர்தான் வந்தார்கள். ஆனால் மொத்த எண்ணிக்கை குறைந்ததால் சதவீதம் மட்டும் தாறுமாறாக அதிகரித்திருப்பதை இப்போது உங்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இதை படித்தீர்களா? (Hormuz Blockade) 3ஆம் உலகப்போர்? டிரம்பின் 5 நகர்வுகள்!
கடந்த தேர்தல் vs தற்போதைய தேர்தல்: புள்ளிவிவரங்கள்
இந்த எளிய கணக்கீட்டை ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பொருத்திப் பார்ப்போம். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் சுமார் 6 கோடியே 29 லட்சமாக இருந்தனர்.
அப்போது பதிவான வாக்குகளின் அடிப்படையில் சுமார் 4 கோடியே 59 லட்சம் பேர் நேரில் வந்து வாக்களித்தனர். இதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்தல் சதவீதம் சுமார் 73.63 ஆக பதிவாகி இருந்தது.
சமீபத்திய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளால் பல லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை தோராயமாக 5 கோடியே 74 லட்சமாக குறைந்துள்ளது.
நேற்று நடந்த தேர்தலிலும் தோராயமாக கடந்த முறையை போலவே 4 கோடியே 84 பேர்தான் வாக்களித்துள்ளனர். இதுகூட இன்னும் உறுதி செய்யப்படாத தகவல். ஆனால் மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததால் சதவீத அளவு 84.65 ஆக உயர்ந்து காட்டியிருக்கிறது.
உடல்நலம்: Fenugreek: நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் Best & Easiest Way
மயிலாப்பூர் தொகுதி: ஒரு நேரடி உதாரணம்
இதை மேலும் தெளிவாக புரிந்துகொள்ள சென்னை மயிலாப்பூர் தொகுதியை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்வோம். முந்தைய தேர்தலில் இங்கு சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர்.
அப்போது அங்கு சுமார் 1 லட்சத்து 52 ஆயிரம் பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். கணக்கீட்டின்படி அங்கு பதிவான வாக்கு சதவீதம் சுமார் 56.24 ஆக இருந்தது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்குப் பிறகு, இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் என 70 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் தற்போதைய மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 99,465 ஆயிரமாக குறைந்தது.
நேற்றைய தேர்தலிலும் மயிலாப்பூரில் ஏறக்குறைய அதே எண்ணிக்கையில்தான் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் மொத்த வாக்காளர் குறைவால் தற்போதைய சதவீதம் 74.89 ஆக உயர்ந்துவிட்டது.
வாக்காளர் பட்டியல் தூய்மையாக்கத்தின் தாக்கம்
வாக்காளர் பட்டியலை மிக நேர்த்தியாக தேர்தல் ஆணையம் சுத்திகரிப்பு செய்ததே இந்த முரண்பாட்டுக்கு ஆணிவேர். இந்த நடவடிக்கையை நாம் மனதார பாராட்டியே ஆக வேண்டும். அதே நேரத்தில் பல நேர்மையான வாக்காளர்களும் நீக்கப்பட்டதையும் மறுப்பதற்கில்லை.
இவர்களில் பலர் விழித்துக்கொண்டு மார்ச் மாதத்தில் சுதாரித்து புதிய வாக்காளர்களாக பதிவு செய்திருக்கிறார்கள்.
போலி வாக்குகளும், இறந்தவர்களின் பெயரில் கள்ள வாக்குகளும் பதிவாவது இதனால் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் தழைக்க இது மிகவும் ஆரோக்கியமான முன்னெடுப்பாகும்.
ஆனாலும் இது போன்ற தொழில்நுட்ப ரீதியான அளவீடுகளை அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக திரித்துக் கூறுகின்றன. மக்களிடம் தங்களுக்கு ஆதரவான அலை வீசுவதாக பொய் பிம்பத்தை கட்டியமைக்கின்றன.
தரவுகளை ஆழமாக ஆராயும் ஊடகங்கள் மட்டுமே இந்த உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. பொதுமக்களும் வெறும் செய்திகளை மேலோட்டமாக நம்பாமல் எண்களை கவனிக்க வேண்டும்.
ஆன்மிகம் – ஆன்மீகம் அறிவோம் | மூன்று சரீரங்கள் | 3 அனுபவ நிலைகள்!
இறுதி பகுப்பாய்வு
இந்த விரிவான பகுப்பாய்வில் இருந்து ஒரு விஷயம் மிகத் தெளிவாக புரிகிறது. அதிகரித்த வாக்குப்பதிவு சதவீதம் (Voter Turnout) என்பது மக்களின் அதிகப்படியான வருகையை குறிக்கவில்லை.
அது தேர்தல் ஆணையம் செம்மையாக செய்த வாக்காளர் பட்டியல் தூய்மையாக்கத்தின் நேரடி விளைவு மட்டுமே. கடந்த முறை எவ்வளவு பேர் வாக்களித்தார்களோ அதே மக்கள் தான் இப்போதும் வந்திருக்கிறார்கள். ஒருசில இடங்களில் சற்று அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்திருக்கலாம். அதன் சதவீதம் ஒன்று முதல் 3 சதவீதம் அளவே இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே இதை வைத்து எந்த ஒரு கட்சியும் மாபெரும் வெற்றி பெறப் போகிறோம் என கணக்கு போட முடியாது. மக்களின் மனநிலை கடந்த தேர்தலை ஒட்டியே அமைதியாக பயணிப்பதை இது காட்டுகிறது.
உண்மையான தரவுகளைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் தலைவர்களின் வீண் பிரதாபங்கள் தவிடுபொடியாகி விடுகின்றன. மித்திரன் செய்திகள் தொடர்ந்து இது போன்ற உண்மை தரவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும்.
விடியோ பதிவு: DMK | AIADMK | NTK | TVK? விஜபி தொகுதிகளில் தற்போதைய சூழல் | அரசியல் அக்கப்போர்
FAQ: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வாக்குப்பதிவு சதவீதம் (Voter Turnout) எப்படி உயர்கிறது?
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் போது, அதே அளவு மக்கள் வாக்களித்தாலும் சதவீத கணக்கீடு தானாக உயர்ந்துவிடும்.
வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன?
இறந்தவர்கள், பல இடங்களில் பெயர் உள்ளவர்கள் மற்றும் முகவரி மாறியவர்களின் பெயர்களை நீக்கி பட்டியலை தேர்தல் ஆணையம் தூய்மைப்படுத்தியது.
கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக மக்கள் வாக்களித்தார்களா?
இல்லை, தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி கடந்த தேர்தலில் வாக்களித்த அதே அளவிலான மக்களின் எண்ணிக்கை தான் நேற்றைய தேர்தலிலும் பதிவாகியுள்ளது. இதில் ஒன்று அல்லது 2 சதவீத வாக்குகள் ஒருசில தொகுதிகளில் அதிகரிக்கவும், அதேபோல் குறைவதற்குமே வாய்ப்புகள் அதிகம்.
100 பேர் 80 ஆன கணக்கு எதை குறிக்கிறது?
போலி பெயர்கள் நீக்கப்படுவதால் மொத்த வாக்காளர்கள் குறைவதையும், அதனால் சதவீத கணக்கீடு எப்படி மாறுகிறது என்பதையும் விளக்கும் உதாரணம் அது.
மயிலாப்பூர் தொகுதியில் என்ன நடந்தது?
நேற்றைய தேர்தலிலும் மயிலாப்பூரில் ஏறக்குறைய அதே எண்ணிக்கையில்தான் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் மொத்த வாக்காளர் குறைவால் தற்போதைய சதவீதம் 74.89 ஆக உயர்ந்துவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் தூய்மையாக்கல் பணியால் என்ன பயன்?
இறந்தவர்கள் மற்றும் போலி பெயர்களில் கள்ள வாக்குகள் பதிவாவது முழுமையாக தடுக்கப்பட்டு ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறது.
அதிகரித்த சதவீதம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா?
உண்மையில் புதிய வாக்காளர்கள் பெருமளவில் வராததால், இந்த சதவீத உயர்வை மட்டும் வைத்து ஆட்சி மாற்றத்தை கணிக்க முடியாது.
ஊடகங்கள் கூறும் முரண்பாடு என்ன?
வாக்கு சதவீதம் உயர்ந்திருந்தாலும், உண்மையான வாக்குகளின் எண்ணிக்கை முந்தைய தேர்தலின் அளவிலேயே உள்ளது என்பதே அந்த முரண்பாடு.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு குறைந்தது?
தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான போலி மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால் மொத்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
தேர்தல் முடிவுகளை கணிக்க எதை பார்க்க வேண்டும்?
வெறும் சதவீத எண்களை பார்க்காமல், முந்தைய தேர்தலுடன் ஒப்பிட்டு பதிவான வாக்குகளின் உண்மையான எண்ணிக்கையை பார்க்க வேண்டும்.
(குறிப்பு: வாக்குப் பதிவு நிறைவை அடுத்து வெளிவந்த தற்காலித் தகவல் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டது. ஒருவேளை வாக்குப் பதிவு சதவீதம் மாறுபட்டால், அப்போது இக்கட்டுரை திருத்தப்படும்)
#TNElection2026 #VoterTurnoutData #ElectionFacts #TNPolitics #RealVsFakeTurnout #ElectionAnalysis #MithiranNews

தமிழக அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக அலசுவதில் நிபுணத்துவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஆர். ராமலிங்கம். 28 ஆண்டுகால கள அனுபவம் கொண்ட இவர், ‘மித்திரன் நியூஸ்’ இணையதளம் மற்றும் ‘Arasiyal Akkappore’, ‘RR Views and Facts’ யூடியூப் சேனல்கள் மூலம் அரசியல், கல்வி, அறிவியல் தகவல்களைத் துல்லியமாக வழங்கி வருகிறார்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்