Read in English / பிற மொழிகளில் படிக்க:
இந்திய அரசியலில் தென்மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படுகிறதா என்ற விவாதம் தற்போது மிகத் தீவிரமாக எழுந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) நடவடிக்கை. இதை தென்மாநிலங்கள் ஒரு மாபெரும் அரசியல் அச்சுறுத்தலாகவே பார்க்கின்றன. பார்க்க வேண்டும்.
இந்த நேரத்தில் மாநிலங்களின் உரிமைகள் எதிர்காலத்தில் பறிபோகாமல் இருக்க தென்மாநிலங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தென்மாநில கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தேவை இப்போது எழுந்துள்ளது.
மக்களவை இடங்களை எதிர்காலத்தில் அதிகரிக்கத் திட்டமிடும் நகர்வு, தென் மாநிலங்களுக்கு எப்படிப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

உள்ளடக்கம்
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) ஒரு அரசியல் சதியா?
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsஇந்திய மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளைப் பிரிப்பதுதான் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை.
இதன்படி பார்த்தால் வடமாநிலங்களில் மக்கள் தொகை பல மடங்கு அதிகமாக உள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.
இதைப் படித்தீர்களா? Shocking Doubt on Rahul Gandhi: ஏப்.18 தமிழகம் வருவாரா?
சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களுக்குப் பரிசளிக்காமல், அதற்காகத் தண்டனை வழங்கும் விதமாக இந்த தொகுதி மறுசீரமைப்பு அமையவுள்ளது.
இதுதான் தென்மாநில அரசியல் தலைவர்களின் பிரதான கவலையாக மாறி உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாநில உரிமைகள் பறிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் தென்மாநிலங்கள் அரசியல் ரீதியாக அனாதைகளாக மாறும் சூழல் ஏற்படும். மத்திய அரசின் முடிவுகளில் தென்மாநிலங்களின் பங்கு முற்றிலும் குறைந்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மகளிர் இடஒதுக்கீடு என்ற தந்திரம்
2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மிக பிரம்மாண்டமாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதன்படி, மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இது வரவேற்கத்தக்க ஒன்று.
ஆனால், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக, தற்போது மக்களவையில் உள்ள 543 இடங்களை 850 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதுவே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தற்போதைய உறுப்பினர்கள் கொண்ட அவையிலேயே மகளிருக்கு 33 சதவீதம் வழங்கியிருக்க முடியும்.
பாஜகவுக்கு மகளிருக்கு இடஒதுக்கீடு செய்ய விருப்பம் இல்லை என்பதை விட, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்த இருக்கைகளை உயர்த்தி அதன் மூலம் இடஒதுக்கீடு வழங்குவது ஒரு அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.
கூடுதலாகக் கிடைக்கும் 307 இருக்கைகளைத் தங்கள் வசமாக்கவே இந்தத் திட்டம்.
பிரதமர் மோடி எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதை நாடறியும். மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பை முன்னிட்டு எம்.பி.க்களுக்கு அவர் ஒரு நீண்ட உருக்கமான வேண்டுகோளை விடுத்திருந்தார்.
நாட்டின் மக்கள் தொகையில் பாதியளவு இருக்கும் மகளிர் தங்களது உரிமைகளைப் பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் வலியுறுத்தினார்.
படிக்கத் தவறாதீர்கள்: உள்ளத்தனையது உயர்வு! – திருக்குறள் கதை 33
வடமாநில ஆதிக்கமும் தெற்கின் வீழ்ச்சியும்
புதிதாக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதன் மூலம் கூடுதலாக 307 இருக்கைகள் கிடைக்கும்.
இந்த இருக்கைகளில் 280 இருக்கைகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வது என்பதுதான் பாஜகவின் திட்டம். மீதமுள்ள 27 இடங்கள் ஆண்களுக்கு முன்பை விட அதிகரிக்கும்.
இது கிட்டத்தட்ட பாஜக பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதுபோல் தன்னுடைய சகுனி ஆட்டத்தை அரங்கேற்றுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு மூலம் குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் தங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கம்.
இதன் மூலம் முக்கிய மக்களவை முடிவுகளை வடமாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டே நிறைவேற்ற முடியும்.
இதற்குத் தென்மாநில உறுப்பினர்களின் தயவு இனி தேவைப்படாது என்ற நிலையை உருவாக்கும் தந்திரம்தான் இது.
காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு
இந்த விஷயத்தில் திமுக மற்றும் ஒருசில எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், காங்கிரஸ் கட்சியும் இதற்கு உடன்பட்டிருக்கும். காரணம், தென்மாநிலங்களில் தங்கள் கட்சிக்குச் செல்வாக்கு குறைந்து வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை.
மேலும், தென் மாநிலத் தலைவர்கள் தேசியக் கட்சிகளுக்கு இணையாக வளர்வதையும் அவர்கள் உள்ளூர விரும்புவதில்லை என்ற விமர்சனம் உள்ளது.
இந்தச் சூழலில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள ராகுல் காந்திக்கு வேறு வழியில்லை. தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தென்மாநிலங்களின் குரலை அவர் எதிரொலிக்க வேண்டிய கட்டாயம்.
இந்தக் கதையை படித்தீர்களா… திருந்தாத உள்ளங்கள்: திருக்குறள் கதைகள் 2
தென்மாநிலத் தலைவர்கள் எதிர்ப்புக் குரலை அடுத்தே வேறு வழியின்றி அழுத்தம் திருத்தமாக இந்த மசோதாவுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
ஒருவேளை மோடியின் தந்திரங்களில் சிக்கினால், காங்கிரஸுக்கு மறுவாழ்வு இல்லை என்பது அவருக்குத் தெரியும்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கணக்கு
பிரதமர் மோடியின் நடிப்புக்குப் போட்டிப் போட்டுத் தென்மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் ஒருவரும் இணையாக நடித்திருக்கிறார். அந்த அரசியல் நடிகர் வேறு யாருமல்ல, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவே.
இவர் தன்னுடைய மாநிலத் தேவைக்காக மிகவும் கவனமாகச் செயல்படுகிறார்.
அதனால் அவர் பாஜகவிடம் போடும் வேஷம் ஏற்புடைய ஒன்றுதான்.
நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது.
மாநிலத் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவைப் பெறவும் அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இது ஒரு வகையில் ஆந்திராவுக்கு மிகவும் லாபகரமானது.
அந்த மாநிலத்துக்கான நிதியுதவியும் மத்திய அரசின் கைவசமே இருக்கிறது. அதனால்தான் அவர் தற்போது பாஜகவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்.
அதேநேரத்தில் அவர் கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்த மசோதா அடுத்த சில பல நடைமுறைச் சிக்கல்களால் தோல்வி அடையும் என்பதையும் கணக்கில் வைத்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு காரியத்தோடுதான் பாஜகவை ஆதரிக்கிறார் என்பதை மோடியும், அமித் ஷாவும் நன்கு அறிவார்கள்.
அதனால்தான், அவருடைய கோரிக்கைகளை ஐந்து ஆண்டுகாலமும் நீடிக்கும் வகையில் மெல்ல மெல்ல நிறைவேற்றி வருகிறார்கள். இருப்பினும் அவரும் இந்த தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தனது மாநிலம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நிச்சயமாக மறைமுகமாக எச்சரிக்கையுடன் இருப்பார் என்பதிலும் சந்தேகம் இல்லை.
திருக்குறள் கதை – விடைத் தேடி
தென்மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய தருணம்
இந்தச் சூழலில் இப்போதாவது தென் மாநிலங்கள் விழித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தருணம் இதுவாக இருக்கும்.
தென்மாநிலங்கள் கட்சி வேறுபாடின்றி மாநில நலனுக்காக ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். மாநில சுயாட்சி உரிமைகள் பறிபோகாமல், மத்தியில் கூட்டாட்சிக்கான மாண்பு கெடாமல் இருப்பதற்கான முன்னெடுப்புகளை அவர்கள் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டும்.
மாநில உரிமைகள் மீது ஆர்வம் கொள்ளும் விஜய் மற்றும் சீமான் போன்றவர்கள் எல்லா தென்மாநிலங்களிலும் இருக்கிறார்கள்.
இந்த தொகுதி மறுசீரமைப்பு சிக்கலை எதிர்க்க அத்தகையவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்தால்தான் எதிர்கால இந்தியா முழுமையான ஜனநாயகத் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் நாடாக விளங்கும்.
இப்போதாவது இதற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னெடுப்புச் செய்வாரா என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுக்கக் கூடிய எண்ணம் தென்மாநில கட்சிகள் அனைத்துக்கும் உண்டு. இதில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியன வேண்டுமானால் தனித்து நிற்கலாம். மற்ற கட்சிகள் ஒன்றிணைந்தாலே போதும் மாநில உரிமைகளை காக்க போராட முடியும். தேசிய கட்சிகளின் குறுகிய மனப்பான்மையை தடுக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
இந்த விடியோவை பார்த்தீர்களா? தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்குது? | முத்தான சுவாரஸ்ய சம்பவங்கள்!
FAQ: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன?
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும் எண்ணிக்கையையும் மாற்றி அமைக்கும் சட்ட நடவடிக்கையாகும்.
தென் மாநிலங்கள் ஏன் இதை எதிர்க்கின்றன?
மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையும் என்பதால் எதிர்க்கின்றன.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது அமலாகும்?
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகே இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.
மக்களவை இடங்கள் 850 ஆக உயருமா?
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், புதிய நாடாளுமன்றக் கட்டட வசதியைக் கொண்டு 800-க்கும் மேல் உயர வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்றத்தின் இருக்கை வசதி எவ்வளவு?
புதிய மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கை என்ன?
ஆந்திராவின் தலைநகராக அமராவதியைக் கட்டமைக்க மத்திய அரசின் முழுமையான அங்கீகாரத்தையும் நிதியுதவியையும் கோருகிறார்.
வடமாநிலங்களின் ஆதிக்கம் எப்படி அதிகரிக்கும்?
அதிக மக்கள் தொகை கொண்ட வடமாநிலங்களுக்குக் கூடுதல் எம்.பி இடங்கள் கிடைப்பதால் நாடாளுமன்றத்தில் அவர்களின் வாக்கு பலம் அதிகரிக்கும்.
ராகுல் காந்தி ஏன் இதை எதிர்க்கிறார்?
தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைவது கூட்டாட்சி மற்றும் ஜனநாயகத் தத்துவத்துக்கு எதிரானது என்பதால் அவர் எதிர்க்கிறார்.
இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு என்ன?
மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், தெற்கின் குரல் ஒடுக்கப்படுவதைத் தடுக்கவும் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்கின்றன.
தென் மாநில முதல்வர்கள் கூட்டமைப்பு சாத்தியமா?
அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து மாநில உரிமைகளுக்காக அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
#தொகுதிமறுசீரமைப்பு #Delimitation #StateRights #SouthIndia #TamilNaduPolitics #MithiranNews

தமிழக அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக அலசுவதில் நிபுணத்துவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஆர். ராமலிங்கம். 28 ஆண்டுகால கள அனுபவம் கொண்ட இவர், ‘மித்திரன் நியூஸ்’ இணையதளம் மற்றும் ‘Arasiyal Akkappore’, ‘RR Views and Facts’ யூடியூப் சேனல்கள் மூலம் அரசியல், கல்வி, அறிவியல் தகவல்களைத் துல்லியமாக வழங்கி வருகிறார்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்