Read in English / பிற மொழிகளில் படிக்க:
நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 ஆக உயர்த்தும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) புதிய மசோதா தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவின் கீழ் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், வரவிருக்கும் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் இந்த தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) நடவடிக்கை, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
உள்ளடக்கம்
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) தமிழகத்துக்கு தண்டனையா?
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் இப்போதைய மக்களவை தொகுதிகள் 543 ஆக உள்ளன.
கடந்த 50 ஆண்டுகளாக அரசியலமைப்பின் 81-ஆவது பிரிவின்படி இந்த எண்ணிக்கை எந்தவித மாற்றமும் இன்றி முடக்கி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற தென்மாநிலங்கள் தேசிய நலன் கருதி மக்கள் தொகையை மிகவும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வந்துள்ளன.
கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதன் மூலம் தென்மாநிலங்கள் மகத்தான வரலாற்றுச் சாதனையை எட்டியிருக்கின்றன.
இதைப் படித்தீர்களா? GPay Pocket Money: 5 பேருக்கு Bank இன்றி UPI! Shocking!
ஆனால், உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் தோல்வியடைந்ததன் காரணமாக மக்கள் தொகை கட்டுப்பாடின்றி பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போதைய தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) நகர்வு, மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென்மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறையும் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இது ஜனநாயக நாட்டில் ஒரு முரண்பாடான நடவடிக்கையாக கருதப்படக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களின் ஆதிக்கம் எப்படி அதிகரிக்கும்?
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை அளவுகோலாகக் கொண்டு தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) முறை அமல்படுத்தப்படுமேயானால், வடமாநிலங்களுக்கு அதிக மக்களவை உறுப்பினர்கள் கிடைக்கும் சூழல் உருவாக்கும்.
நாடாளுமன்ற இருக்கைகள் 850 ஆக உயரும் பட்சத்தில், அதில் சரிபாதிக்கும் மேலான இடங்கள் இந்தி பேசும் மாநிலங்களுக்கே சென்றுவிடும்.
இதனால், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் அதிகாரத்திலும், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை தேர்ந்தெடுப்பதிலும் முழுமையாக வடமாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும்.
இதையும் படியுங்கள்: STAR 3.0 திட்டம்: வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு! 5 முக்கிய நன்மைகள்
தமிழகம் போன்ற மாநிலங்கள் தங்களது மொழி, கலாச்சாரம் மற்றும் சுயாட்சி உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் போது, அந்த குரல் பெரும்பான்மை பலத்தால் நசுக்கப்பட்டுவிடும்.
இப்போதே ஓரளவு பலம் தென்மாநிலங்களில் இருந்தாலும் கூட, மும்மொழிக் கொள்கை போன்றவற்றில் மத்தியில் எந்த அரசாக இருந்தாலும் அதை தென் மாநிலங்களில் திணிக்கவே எத்தனிக்கின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்ற இருக்கைகளில் தென்னிந்திய மாநிலங்களுக்கு போதிய இடம் இல்லாத சூழலில் அவற்றின் அதிகாரம், சுயாட்சி போன்றவற்றுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்து வரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதை படித்துவிட்டீர்களா? அசத்தலான 7 துறைகளில் அரசு வேலைவாய்ப்பு பெறுவது எப்படி?
850 எம்பிக்கள்: நாடாளுமன்றத்தில் புதிய அதிகாரப் பகிர்வு
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் 888 மக்களவை உறுப்பினர்கள் அமரும் வகையிலான வசதிகள் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு செய்யப்பட்டிருக்கின்றன.
இதனால், 2029-ஆம் ஆண்டு 850 எம்பிக்களைக் கொண்ட மிகப்பெரிய அவையாக மக்களவை மாறும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நகர்வாகவே உள்ளது.
இந்த மாபெரும் எண்ணிக்கை அதிகரிப்பில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்கள் தொகை அடிப்படையில் எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படும் என்பதே தற்போதைய மிகப்பெரிய கேள்வியாகவும் உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்தின் தற்போதைய 39 எம்பிக்கள் என்ற பலம், 850 பேர் கொண்ட அவையில் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்.
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) பிற தென்னிந்திய மாநிலங்களின் குரல்வளையையும் நசுக்கும்..
முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி போராட்டம்
தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்ற அநீதியை சுட்டிக்காட்டியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான எதிர்ப்பை நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பதிவு செய்திருக்கிறார்.
தென்மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்தவொரு தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) முயற்சியையும் ஜனநாயக ரீதியில் ஏற்க முடியாது என அவர் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.
இதன் அடையாளமாகவே, இந்த மசோதாவால் தமிழகத்திற்கு ஏற்படப் போகும் பேராபத்தை உணர்த்தும் வகையில் தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றி மாநிலத்தின் எதிர்ப்பை காட்ட அறைகூவல் விடுத்துள்ளார்.
ஜனநாயகத்தில் மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அவருடைய அறைகூவல் ஒரு தனிப்பட்ட கட்சித் தலைவருடையது அல்ல. தமிழ் மாநிலத்தின் நலன்களில் அக்கறை கொண்ட ஒரு குடிமகனின் அக்கறை என்றுதான் இந்த நேரத்தில் கட்சி சார்பின்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது உங்களுக்காக... அண்ணாமலை விலகல்: பாஜகவை அதிர வைத்த 3 காரணங்கள்!
பொருளாதார பங்களிப்பும் அரசியல் வீழ்ச்சியும்
இந்திய ஒன்றியத்திற்கு அதிக வரி வருவாயை ஈட்டித் தரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு எப்போதுமே முன்னணியில் இருக்கிறது.
ஆனால் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதா அமல்படுத்தப்பட்டால், நமது நிதி ஆதாரங்கள் அனைத்தும் வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு திருப்பி விடப்படும் அபாயமும் உள்ளது.
நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை குறைந்தால், மாநிலத்திற்கான நியாயமான நிதியைப் பெறுவதிலும் அரசியல் ரீதியான பெரும் சிக்கல்களும் அதிகரிக்கும்.
ஒவ்வொரு முறை நிதி கமிஷன் அமைக்கப்படும் போதும், மக்கள் தொகை ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படும் நிலையில், தமிழகம் பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்கப்படும்.
எனவே, தேசத்தின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை குறைத்த தமிழகம், அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதாரம் என இரண்டு விதத்திலும் தண்டனையை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும்.
கட்சிகளின் நிலைப்பாடு
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரத்தில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மாறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடியில் பரிதாப நிலை
மத்திய அரசின் இந்தத் தொகுதி சீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டிற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
“தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் ஒருபோதும் குறையாது” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வரவிருக்கும் தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்கி, மக்கள் மத்தியில் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 2024-இல் சட்டப்பேரவையில் இத்திட்டத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அதிமுக ஆதரித்திருந்தது.
ஆனால் அதிமுக பாஜக தன்னுடைய கூட்டணியில் இருப்பதோடு, அதனுடைய தயவு எதிர்காலத்தில் தேவை என்ற ரீதியில்தான் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) பார்ப்பது அறியாமை என்பதை விட அபத்தானமான முடிவாகவும் இருப்பதை எடப்பாடியின் பேச்சு சுட்டிக் காட்டுகிறது.
இதுவே எதிர்கால தமிழ்நாடு அரசியல் களத்துக்கு எடப்பாடி தகுதியற்றவர் என்பதை நிரூபிக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
முக்கியமான செய்தி: சிலிண்டருக்கு குட்பை! குழாய் வழி எரிவாயுவின் 7 மெகா நன்மைகள்!
தவெக விஜய் நிலைப்பாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒரு அறிக்கை மூலம் தொகுதி மறுவரையறைக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.
“பொறுப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களைத் தண்டித்துவிட்டு, மக்கள் தொகையை உயர்த்திய வட மாநிலங்களுக்குப் பரிசளிப்பது போன்ற பாரபட்சமான நடவடிக்கை இது” என அவர் சாடியிருக்கிறார்.
சீமான் நிலைப்பாடு
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விஷயத்தில் திமுக மற்றும் மத்திய அரசு ஆகியவற்றை அரசியல் ரீதியாக சாடியிருக்கிறார்.
“தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை என்ற பெயரில், ஏற்கனவே தொகுதிகளைச் சீர்குலைத்ததே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான்” என அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, ‘தமிழ் தேசியம்’ மட்டுமே மாநில சுயாட்சிக்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என சீமான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சீமான் இதையும் தேர்தல் அரசியலாக மாற்றியிருக்கிறாரே தவிர, “வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்” என்ற அண்ணாவின் பிரபலமான வசனத்தை ஏனோ மறந்துவிட்டு பேசுவது ஆச்சரியமாகவே இருக்கிறது.
தமிழ்நாடு தன்னுடைய உரிமையை அடிப்படையிலேயே விட்டுக் கொடுக்காமல் இருந்தால் நாளை ஒருவேளை செந்தமிழன் சீமான் முதல்வரானால் கூட மத்திய அமைச்சரவையில் பலமாக குரல் எழுப்ப முடியும் என்பது ஏன் அவருக்கு புரியாமல் போனது என்று தெரியவில்லை.
காங்கிரஸ் நிலைப்பாடு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) முறையை ஒருமனதாக நிராகரிப்பதாக அறிவித்திருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதா “விஷமத்தனமானது மற்றும் கொடூரமானது” என்று கடுமையாக சாடியுள்ளார்.
படியுங்கள்: தமிழக ஆளுநர் மாற்றம்: 9 மாநில ரகசியங்கள் பின்னணி!
பாஜக நிலைப்பாடு
ஏற்கெனவே தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத பாஜக மாநிலத் தலைமை, தமிழக நலனை விட, மத்தியில் பாஜக தலைமை இருக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளோடு செயல்படக் கூடியது. அதனால் அது தமிழகத்தின் பாதிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாது.
இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றும் இல்லை. அதனால் அது மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்த்தால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.
தேசிய ஊடகங்களின் பார்வை
பொதுவாக, ஒருசில தேசிய ஊடகங்களும், நாளிதழ்களும் இந்த விஷயத்தை நடுநிலைமையோடு கையாண்டிருப்பதையும் காண முடிகிறது.
இந்த தொகுதி சீரமைப்பு மறுவரையறையால் ஏற்படப்போகும் பாதிப்புகளை எச்சரித்திருக்கின்றன.தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) நடந்தால் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் மட்டுமே 50க்கும் மேற்பட்ட புதிய எம்பிக்களை கூடுதலாகப் பெறும் என அந்த ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அதே சமயம், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்ற இடங்கள் தொடர வேண்டும் என்பதே பல முன்னணி அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அவ்வாறு இல்லையெனில், பொருளாதார ரீதியாகவும், மக்கள் தொகை கட்டுப்பாட்டிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு ராஜ்யசபாவிலோ அல்லது வேறு வழிகளிலோ சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு சிறப்பு அம்சத்தையும் மத்திய அரசு பரிசீலித்தாவது முக்கியம்.
தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது எப்படி?
பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கும் மசோதா அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
ஆனால், இந்த முற்போக்கான மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும், தென்மாநிலங்களை நசுக்கும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) நடவடிக்கையோடு இணைத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் உரிமைச் சட்டம் அமலுக்கு வரும் என்ற நிபந்தனை, மாநில உரிமைகளுக்கு விடப்பட்ட மறைமுக சவால்.
எனவேதான், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது வேறுபாடுகளை மறந்து தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரத்தில் மாநில உரிமைகளுக்காக ஓரணியில் திரண்டிருக்கின்றன. அவற்றில் விடுபட்டவை பாஜகவும் அவற்றின் அடிமைகளும் மட்டுமே.
அரசியல் மாற்றம்: திமுகவில் ஓபிஎஸ்: தனித்து விடப்பட்டதன் உச்சகட்டம்
மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளை மதிக்கும் வகையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து நடுநிலையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்பதை மத்திய அரசுக்கு வலிமையாக தெரியப்படுத்துவது அவசியம்.
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவை நிறைவேற்ற பலம் உள்ளதா?
இந்த மசோதா அரசியலமைப்பு திருத்தம் (Constitutional Amendment) என்பதால், இதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சாதாரண பெரும்பான்மை மட்டும் போதாது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும், வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3rd Majority) ஆதரவு கட்டாயம் தேவை.
நரவானே குண்டு: ராகுல் காந்தி ஆவேசம்! 2 கேள்விகள்!
அதாவது 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) வெற்றி பெற தோராயமாக 362 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும்.
ஆனால், தற்போதைய ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பலம் மக்களவையில் சுமார் 293 எம்பிக்கள் மட்டுமே ஆகும்.
எனவே, பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு தாமாகவே முன்வந்து இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான தனிப்பெரும்பான்மை பலம் மக்களவையில் இல்லை.
அதேபோல, மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் கிடையாது.
மேலும், இது மாநிலங்களின் உரிமைகளை நேரடியாக பாதிக்கும் விவகாரம் என்பதால், இந்தியாவின் 50 சதவீத மாநில சட்டமன்றங்களும் இதற்கு ஒப்புதல் (Ratification) அளிக்க வேண்டும்.
எனவே, எதிர்க்கட்சிகளான ‘இந்தியா’ கூட்டணியின் ஆதரவோ அல்லது பிற மாநிலக் கட்சிகளின் ஆதரவோ இல்லாமல் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது அரசுக்கு சாத்தியமற்ற ஒன்றாகும்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சி உறுப்பினரும் மக்களவையில் உஷாராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் ஜனநாயகத்தில் விழும் முதல் சறுக்கலாக இது இருக்கும்.
விடியோ: தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்குது? | முத்தான சுவாரஸ்ய சம்பவங்கள்!
FAQ: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
2026 தொகுதி மறுவரையறை என்றால் என்ன?
மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளையும், இடங்களின் எண்ணிக்கையையும் மாற்றி அமைக்கும் செயல்முறையே தொகுதி மறுவரையறை ஆகும்.
மக்களவை இடங்கள் 850 ஆக உயருமா?
ஆம், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 888 உறுப்பினர்கள் அமர முடியும் என்பதால், தொகுதி சீரமைப்புக்குப் பிறகு மக்களவை இடங்கள் சுமார் 850 ஆக உயர வாய்ப்புள்ளது.
தென்மாநிலங்கள் ஏன் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவை எதிர்க்கின்றன?
மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்மாநிலங்களுக்கு, புதிய மக்கள் தொகை அடிப்படையிலான சீரமைப்பால் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்பதால் எதிர்க்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் கருப்புக் கொடி போராட்டம் ஏன்?
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழகத்தின் அரசியல் உரிமைகளும், நாடாளுமன்ற பலமும் பறிக்கப்படுவதை எதிர்த்து மாநிலம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டத்தை அவர் அறிவித்துள்ளார்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?
தொகுதிகள் மக்கள் தொகை அடிப்படையிலேயே பிரிக்கப்படுகின்றன. மக்கள் தொகையை குறைத்த மாநிலங்கள் குறைவான எம்பிக்களையும், பெருக்கிய மாநிலங்கள் அதிக எம்பிக்களையும் பெறும் நிலை உருவாகும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது அமலாகும்?
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பின்னரே இந்த 33% இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 81வது பிரிவு என்ன சொல்கிறது?
1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மக்களவை இடங்களின் எண்ணிக்கை இருக்கும் என்பதையும், இது 2026 வரை மாற்றப்படாது என்பதையும் இப்பிரிவு குறிக்கிறது
நாடாளுமன்றத்தில் உ.பி, பீகார் ஆதிக்கம் அதிகரிக்குமா?
கண்டிப்பாக. அங்கு மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், புதிய சீரமைப்பின்படி அம்மாநிலங்களுக்கு அதிக எம்.பி இடங்கள் கிடைக்கும், இதனால் அவர்களின் அரசியல் ஆதிக்கம் கூடும்.
தமிழகத்தின் தற்போதைய எம்.பி.க்கள் எண்ணிக்கை எவ்வளவு?
தமிழகத்தில் தற்போது 39 மக்களவை உறுப்பினர்களும் (எம்.பி), புதுச்சேரியில் 1 உறுப்பினரும் என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
#Delimitation2026 #TamilNaduPolitics #MKStalin #LokSabha #StateRights #WomenReservationBill #MithiranNews

தமிழக அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக அலசுவதில் நிபுணத்துவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஆர். ராமலிங்கம். 28 ஆண்டுகால கள அனுபவம் கொண்ட இவர், ‘மித்திரன் நியூஸ்’ இணையதளம் மற்றும் ‘Arasiyal Akkappore’, ‘RR Views and Facts’ யூடியூப் சேனல்கள் மூலம் அரசியல், கல்வி, அறிவியல் தகவல்களைத் துல்லியமாக வழங்கி வருகிறார்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்