🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

தமிழக ஆளுநர் மாற்றம்: 9 மாநில ரகசியங்கள் பின்னணி!

Read in English / பிற மொழிகளில் படிக்க:

இந்திய அரசியலில் நேற்று இரவு ஒரு மிகப்பெரிய திருப்பம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் உத்தரவின் பேரில் அதிரடியாக ஆளுநர் மாற்றம் நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது.

இந்த பட்டியலில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், டெல்லி, தெலங்கானா, மகாராஷ்டிரா, நாகலாந்து, பிகார், கேரளம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கும்.

ஆளுநர் மாற்றம் ஏற்படுத்தும் அதிர்வலைகள்

திடீரென அரங்கேறியுள்ள இந்த ஆளுநர் மாற்றம் நடவடிக்கையின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் கணக்குகள் இருப்பதாக மூத்த அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

பல மாநிலங்களில் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஆளும் மத்திய அரசின் முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கம் செல்லும் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக கடும் அரசியல் குடைச்சல் கொடுத்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநிலத்துக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தின் ஆளுநராக இருந்த சி.வி.அனந்த போஸ், சில நெருக்கடிகளால் திடீரென பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்று பேசப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நிர்வாக ரீதியாக குடைச்சல் கொடுக்கவே இந்த ஆளுநர் மாற்றம் என்றும் பேசப்படுகிறது.

தமிழகத்தின் ஆளுநர் யார்?

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அடுத்து, தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக கேரள மாநிலத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதல் பொறுப்பை ஏற்கிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசுடன் இவர் தொடர்ந்து கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வருபவர் என்ற தகதியே இப்போது தமிழ்நாட்டின் கூடுதல் பொறுப்பை ஏற்க வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் வரும் தேர்தல் நேரத்திலும், எதிர் வரும் அரசாக பாஜகவுக்கு எதிரான அரசு ஒருவேளை அமையுமானால் அதற்கும் சரியான நபராக அவர் கருதப்படுகிறார்.

அதே நேரத்தில் சாதகமான அரசு வந்தாலும் அதற்கு ஏற்ப நடந்துகொள்பவராகவும் இருக்கிறார்.

9 மாநிலங்களில் மாற்றப்பட்ட ஆளுநர்கள்

குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமாக புதிய ஆளுநர்கள் மாற்றம் பட்டியலில் உள்ள முக்கிய விவரங்கள்:

மேற்கு வங்கம் மாநிலத்துக்கு ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டுக்கு கேரள மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பு..

அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தரண்ஜித் சிங் சந்து டெல்லியின் துணை நிலை ஆளுநராக நியமிககப்பட்டிருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் யார்?

டெல்லியின் துணை நிலை ஆளுநராக இருந்து வந்த வினய் குமார் சக்சேனா, இப்போது லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

லடாக் ஆளுநர் கவீந்தர் குப்தா இமாச்சலப் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

இமாச்சலப் பிரதேச ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா தெலங்கானா மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தெலங்கானா ஆளுநர் ஜிஷ்னு தேவ் வர்மா மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆளுநர் மாற்றம்: பின்னணி அரசியல் என்ன?

தற்போது நடந்தேறியுள்ள ஆளுநர் மாற்றம் வழக்கமான நிர்வாக ரீதியிலானது அல்ல. இதில் மிக ஆழமான தேர்தல் வியூகங்கள் அடங்கியுள்ளன.

குறிப்பாக மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சிகள் ஆட்சி செலுத்தும் மாநிலங்களில் விரைவில் தேர்தல் வரப்போகிறது.

இந்த மாநில அரசுகளுக்கு கடும் நெருக்கடியை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்தே இந்த ஆளுநர் மாற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக இப்போது அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்திருக்கிறது.

ஆளுநர் மாற்றம் – ஆர்.என். ரவியின் சாதனைகள்

தமிழ்நாட்டின் ஆளுநராக 2021 செப்டம்பரில் பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி இப்போது வரை மிகச் சிறப்பாக மாநில அரசு விவகாரங்களில் தலையிட்டு மாநில அரசுடன் மோதல் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

இதைப் படித்தீர்களா? சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வெளிநடப்பு: வெடித்த 3 முக்கிய சர்ச்சைகள்!

ஆர்.என். ரவியின் அரசுக்கு எதிரான சாதனைகளில் முக்கியமானவை

அவருடைய சாதனைகளில் முத்தாய்ப்பாக தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்டகாலம் கிடப்பில் வைத்ததை குறிப்பிடலாம்.

குறிப்பாக, நீட் விலக்கு மசோதா – மாணவர்களின் நலன் கருதி மாநில அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது, அதைத் தொடர்ந்து மீண்டும் நிறைவேற்றி அனுப்பியபோது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தாமதம் செய்தது பெரும் சர்ச்சையானது.

பல்கலைக் கவக துணை வேந்தர் நியமன விவகாரத்தில், பல்கலைக் கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் அதிகாரும் கோரும் மசோதாக்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறுத்தி வைத்தார்.

இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றபோது உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துக்களை ஆளுநருக்கு தெரிவித்தது.

வெளிநடப்பு செய்த ஆளுநர்

ஆளுநரின் உரையின்போது அரசு தரப்பில் தயாரித்து அளிக்கப்பட்ட உரையை வாசிக்காமல் சில பகுதிகளை தவிர்த்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தபோது பாதியிலேயே அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்.

அத்துடன் தேசிய கீதம் விவகாரத்தை வைத்து சட்டப் பேரவையில் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார்.

அது மட்டுமின்றி தமிழ்நாடு பெயரிலான சர்ச்சை, திராவிட சித்தாந்தம் என்பது காலாவதியான கொள்கை, கல்வி நிலையங்களில் அவர் சனாதன தர்மம் பற்றி பேசியது போன்றவற்றையும் அவர் அரசுடன் சிறப்பாக மோதியதை குறிப்பிடலாம்.

எத்தனை மாநிலங்களில் ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்?

மேற்கு வங்கம், தமிழ்நாடு, டெல்லி உள்பட மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் மாற்றம் நடந்துள்ளது.

தமிழ் நாட்டின் புதிய ஆளுநர் யார்?

கேரளத்தின் ஆளுநர் பொறுப்பில் இப்போதுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கூடுதலாக தமிழக ஆளுநர் பொறுப்பை ஏற்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டது ஏன்?

தமிழ்நாட்டில் இப்போது பாஜக இல்லாத திமுக ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிர்வாகத்துக்கு கடைசி வரை மிகுந்த குடைச்சலை கொடுத்து வந்தவர் ஆர்.என்.ரவி. அந்த தகுதியே அவரை இப்போது மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் செய்ய வைத்திருக்கிறது.

மேற்கு வங்கத்தின் ஆளுநர் சி.வி.அனந்த போஸ் ஏன் ராஜினாமா செய்தார்?

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதில் ஏதோ மறைமுக
அரசியல் நெருக்கடிகள் இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் சந்தேகம் எழுப்பப்படுகிறது.

திடீரென இப்போது ஆளுநர் மாற்றம் ஏன்?

நிர்வாக காரணங்களுக்காக என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை தீவிரமாக கண்காணிக்க தகுதியானவர்கள் இவர்கள்தான் என்ற ரீதியில் இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பதாக கருதப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி vs திமுக அரசு – GOVERNOR POWER எத்தகையது?

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளாகும். இது மித்திரன் செய்திகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை அல்ல.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *