🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

2026 திமுக தேர்தல் வியூகம்: வியக்க வைக்கும் Masterplan

Read in English / பிற மொழிகளில் படிக்க:

2026 சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தற்போதைய திமுக தேர்தல் வியூகம் அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

.தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக, வரவிருக்கும் தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீத வெற்றியைப் பதிவு செய்ய ஒரு மாபெரும் திட்டத்தைத் தீட்டியுள்ளது.

எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு சட்டமன்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் கணக்காக இருக்கிறது.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

ஒரு காலத்தில் ஜெயலலிதா எதிர்க்கட்சிகளைச் சிதறடித்து எப்படி மாபெரும் வெற்றிகளைப் பெற்றாரோ, அதே இலக்கை நோக்கி திமுக பயணிக்கிறது. ஆனால் அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள திமுக தேர்தல் வியூகம் முற்றிலும் மாறுபட்டது. அதைப் பற்றித்தான் நாம் விரிவாக பார்க்கப் போகிறோம்.

உள்ளடக்கம்

கூட்டணியை வலுப்படுத்தும் திமுக

தற்போதைய அரசியல் சூழலில், கூட்டணியை மென்மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஆளுங்கட்சி இருக்கிறது.

அதற்காக, தன்னுடைய அணிக்கு வர விரும்பும் புதிய சிறு கட்சிகளையும் அரவணைக்க தலைமை முடிவு செய்துள்ளது. இந்த மெகா கூட்டணியை உருவாக்குவதுதான் 2026-க்கான முதன்மையான திமுக தேர்தல் வியூகம் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

புதிய கட்சிகளை உள்ளே கொண்டு வர வேண்டும் என்றால், கணிசமான தொகுதிகளை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இதற்காக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சீட் எண்ணிக்கையைக் குறைக்க திமுக கோரியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் சமீபத்தில் அளித்த பேட்டி மூலம் இந்த நகர்வு உறுதியாகியுள்ளது.

திமுக தேர்தல் வியூகம்
image: Mithiran AI Desk

தன் தொகுதிகளையும் குறைத்துக் கொள்ளும் தந்திரம்

அதுமட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளை மட்டும் தியாகம் செய்யச் சொல்லாமல், திமுகவும் தனது சொந்த தொகுதிகளைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ளத் தயாராகியுள்ளது.

இந்த திமுக தேர்தல் வியூகம் சிறந்த ராஜதந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் இந்த தந்திரம் சற்று ஆபத்தானதும் கூட என மூத்த அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சிறு கட்சிகள் தனித்துப் போட்டியிட்டால் ஆங்காங்கே வாக்குகள் சிதறும் அபாயம் இருப்பதை அறிவாலயம் நன்கு உணர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 234 இடங்களில், ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவினாலும் பரவாயில்லை, ஆனால் ஒட்டுமொத்த வாக்குகளும் சிதறாமல் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என்பதுதான் திமுகவின் திட்டம்.

இதன் மூலம் எதிரணிகள் தங்கள் அணிகளில் எந்த கட்சியையும் சேர்க்க முடியாமல் தடுமாறும நிலை ஏற்படுவதும் உண்மை. அத்துடன் சிறு கட்சிகளும் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக நம்புவதால் மிக எளிதாக திமுக அணியில் சேருவதற்கு கொஞ்சமும் தயக்கம் காட்டுவதில்லை.

மதில் மேல் பூனையாக அங்கும் பேசி, இங்கும் பேசி வந்த தேமுதிக இப்போது திமுக அணியில் இணைந்ததும் இந்த லாப, நஷ்டக் கணக்கை போட்டு பார்த்துதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பல தியாகங்களை உள்ளடக்கிய இந்த திமுக தேர்தல் வியூகம் அழுத்தமாகச் செயல்படும் என மு.க. ஸ்டாலின் நம்புகிறார்.

சிறு கட்சிகளுக்கு அழைப்பு: மாஸ்டர் ப்ளான்

சிறு கட்சிகள் குறைவான வாக்கு வங்கியை வைத்திருந்தாலும், அவை பல நேரங்களில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவது இயல்பு.

அதனால்தான் அவர்களைக் கூட்டணியில் சேர்த்து, குறைந்தபட்ச தொகுதிகளை வழங்கி திருப்திப்படுத்த திமுக நினைக்கிறது.

வாக்குகள் சிதறுவதைத் தடுக்கும் இந்த திமுக தேர்தல் வியூகம் எந்த இடத்திலும் பிழையின்றி மிக நேர்த்தியாக அரங்கேற்றி விட வேண்டும் என்பதில் தொகுதி பங்கீட்டு குழுவுக்கு ஒரு எச்சரிக்கையையும் திமுக தலைமை கொடுத்திருப்பதாக பேசப்படுகிறது.

இந்த திமுக தேர்தல் வியூகம் மற்றொரு புறம் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பாதிப்புதான். காரணம் அது மிகப் பெரிய எதிர்பார்ப்போடு அதிக தொகுதிகளை கேட்டு வந்தது. இப்போது அதுவும் தன் பங்குக்கு தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஒருவேளை காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தால், முன்பு போட்டியிட்ட தொகுதிகளைக் காட்டிலும் அதிகபட்சம் 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம். அதற்கு மேல் தொகுதிகளை காங்கிரஸ் பெற முடியாது என்பதுதான் அரசியல் பார்வையாக உள்ளது.

காங்கிரஸும் கிடைத்த வரை லாபம் என்ற நோக்கில்தான் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளது. அதனுடைய நோக்கம் இந்தியா கூட்டணி பலம் பெற வேண்டும் என்பதுதான். இப்போதைய சூழலில் திமுகவை பகைத்துக்கொண்டு மாற்று அணியை தேர்வு செய்வது புத்திசாலித்தனமல்ல என்பது காங்கிரஸ் தலைமையும் உணர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என கருதும் திமுக தேர்தல் வியூகம்

அத்துடன் காலகட்டத்தில் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானது என்பதை திமுக தலைமை அறிந்துள்ளது. ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதே சிறு கட்சிகளுக்கும் பாதுகாப்பானது என்பதால், அவர்களும் இந்த முடிவை ஏற்றுக்கொள்வார்கள். இந்த பரஸ்பர புரிதலை அடிப்படையாகக் கொண்டே திமுக தேர்தல் வியூகம் நாளுக்கு நாள் கூர்தீட்டப்படுகிறது.

பூத் கமிட்டி வியூகம்: 370 வாக்குகள் கணக்கு!

சமீபத்தில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், 2026 தேர்தலில் திமுக அணி 2.50 கோடி வாக்குகளைப் பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார்.

தமிழகத்திலுள்ள சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளை வைத்து கணக்கிட்டால், ஒரு பூத்துக்கு குறைந்தபட்சம் 370 வாக்குகளைப் பெற்றாக வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இந்த “370 வாக்குகள்” இலக்கைச் சரியாக எட்டிவிட்டால், மீண்டும் ஆளுங்கட்சியே அரியணையில் அமரும் என்பதுதான் இந்த திமுக தேர்தல் வியூகம் உணர்த்தும் முக்கிய சாராம்சம்.

இதற்காகவே ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற திட்டத்தின் கீழ், அடிமட்டத் தொண்டர்களை முடுக்கிவிடும் வேலைகளை அறிவாலயம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் & சீமான் வாக்கு வங்கி

மறுபுறம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பிரவேசம் களத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் உண்மையான பலம் என்ன, எந்தெந்த கட்சிகளின் வாக்குகளை அவர்கள் பிரிப்பார்கள் என்பது இன்னமும் கணிக்க முடியாத புதிராகவே நீடிக்கிறது. இந்தப் புதிய சவாலை எதிர்கொள்ளவும் ஒரு வலுவான திமுக தேர்தல் வியூகம் அவசியமாகிறது.

அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடைய கட்சி, தேர்தலுக்குத் தேர்தல் தனது வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இத்தகைய சூழலில், வாக்குகள் எந்தத் திசையிலும் பிரியாமல் இருக்க ஒரு பிரம்மாண்டமான கூட்டணி மட்டுமே ஒரே தீர்வு. அதை நோக்கியே திமுக தலைமையின் நகர்வுகள் அனைத்தும் அமைந்துள்ளன.

அதிமுகவின் பலவீனமும் ஆளுங்கட்சியின் கணக்கும்

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தற்போது பலவீனம் அடைந்துவிட்டதாகவே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இருப்பினும், அந்தப் பலவீனத்தை தங்களுக்கு முழுமையான சாதகமாக மாற்றிக்கொள்ள திமுக விரும்புகிறது.

இதற்காக உளவுத்துறை மற்றும் ஊடகங்களின் செய்திகளை ஆராய்ந்து, அதற்கேற்ப திமுக தேர்தல் வியூகம் தொடர்ந்து மாற்றியமைக்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து விடக் கூடாது என்பதிலும், தங்களுக்கு எதிரான வாக்குகள் ஓர் அணியில் திரண்டு விடக் கூடாது என்பதிலும் ஸ்டாலின் மிகவும் தெளிவாக உள்ளார்.

ஒட்டுமொத்தமாக, தங்களது சொந்த பலத்தை விட அணியின் பலத்தை நம்பி, மெகா வெற்றியை அறுவடை செய்யத் துடிக்கும் இந்த திமுக தேர்தல் வியூகம் தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

என்னதான் இந்த திமுக தேர்தல் வியூகம் மிகத் துல்லியமாக வகுக்கப்பட்டாலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிகள் வாக்காளர்களை பணப் பட்டுவாடா மூலம் பந்தாடும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

அப்போது வாக்காளர்களிடம் காணப்படும் மனநிலையை பொருத்தே வெற்றி வாய்ப்பு அமையும். எனவே, மெகா கூட்டணியின் கணக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு, இப்போதே வெற்றியை உறுதி செய்துவிட முடியாது என்பதே தவிர்க்க முடியாத கள யதார்த்தம்.


FAQ: மக்கள் அதிகம் தேடுபவை

2026-ல் திமுகவின் மாபெரும் தேர்தல் வியூகம் என்ன?

கூட்டணியை விரிவுபடுத்தி, சிறு கட்சிகளையும் இணைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்குவதுதான் தற்போதைய பிரதான திமுக தேர்தல் வியூகம்.

காதர் மொகிதீன் பேட்டி உணர்த்தும் அரசியல் மாற்றம் என்ன?

காதர் மொகிதீன் பேட்டி உணர்த்தும் அரசியல் மாற்றம் என்ன? தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறைக்கப்படும் என்பதையும், புதிய கட்சிகள் வரவுள்ளதையும் அவரது பேட்டி உறுதி செய்கிறது.

திமுக தனது சொந்த தொகுதிகளைக் குறைத்துக் கொள்ளக் காரணம் என்ன?

வாக்குகள் சிதறாமல் தடுக்க, புதிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்க தனது சொந்த தொகுதிகளை விட்டுக்கொடுக்கவும் திமுக தயாராகியுள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தால் ஆளுங்கட்சிக்கு பாதிப்பு வருமா?

அவர்களின் பலம் இன்னும் கணிக்கப்படவில்லை என்பதால், அந்த வாக்குச் சிதறலைத் தடுக்கவே சிறு கட்சிகளை இணைக்கும் திமுக தேர்தல் வியூகம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையை திமுக விரும்புகிறதா?

ஆம், எந்தவொரு தொகுதியிலும் பலமான எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற நாசுக்கான அரசியல் கணக்குதான் ஆளுங்கட்சியின் இலக்கு.

சீமானின் வாக்கு வங்கி உயர்வு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

கண்டிப்பாக ஏற்படுத்தும். அதனால்தான் எந்த வாக்கும் சிதறாமல் இருக்க, அனைத்துத் தரப்பரையும் அரவணைக்கும் திமுக தேர்தல் வியூகம் முன்னெடுக்கப்படுகிறது.

சிறு கட்சிகள் குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்வார்களா?

வெற்றி வாய்ப்பு மற்றும் அரசியல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான சிறு கட்சிகள் ஆளுங்கட்சி கூட்டணியிலேயே நீடிக்க விரும்புவார்கள்.

இந்த வியூகத்தில் முதல்வர் ஸ்டாலினின் முக்கிய கணக்கு என்ன?

ஓரிரு இடங்களில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் பலவீனப்படுத்தி, கூட்டணியாக 100% வெற்றியை அடைவதே அவரது கணக்கு.

2026 தேர்தல்: மு.க.ஸ்டாலின் கையில் +12% வாக்கு வங்கி உண்மையா!

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளாகும். இது மித்திரன் செய்திகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை அல்ல.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *