🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

TN Election 2026: சிசிடிவிக்கே விபூதி அடிக்கப்போகும் மேஜிக்!

Read in English / பிற மொழிகளில் படிக்க:

தமிழ்நாட்டில் இப்போதே அரசியல் களம் செம சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. வரப்போகும் TN Election 2026 திருவிழாவுக்கு அனைத்து கட்சிகளுமே தயாராகிவிட்டன.

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியாகும் முன்பே, ‘எப்படியாவது இந்த தடவை நம்ம ஓட்ட போட்டுறணும்’ என தமிழக மக்கள் பெரும்பாலோர் ரேஷன் கார்டையும், ஆதார் அட்டையையும் இப்போதே பையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம், வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும், வீடு தேடி வரப்போகும் அந்த காந்தி நோட்டுகளும், பம்பர் பரிசுகளும் தான்!

ஆளுங்கட்சியின் மாஸ்டர் பிளான்: ரூ.2000 சரவெடி

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

தற்போதைய திமுக ஆட்சியில் முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் தேர்தல் களத்தில் ஒரு செம மாஸ்டர் பிளானை இறக்கியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்ற எதிர்கால வாக்குறுதிகளை மட்டுமே சொல்லி வந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை கணக்கில் ரூ.5000-ஐ போட்டு அதிரடி காட்டியிருக்கிறது.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இது இன்னும் அதிகரிக்கப்படும் என TN Election 2026-க்கான அட்வான்ஸ் புக்கிங்கை ஆளுங்கட்சி இப்போதே பிரம்மாண்டமாக வாக்குறுதி போஸ்டரை ஒட்டி எதிரணிகளை திணர வைத்திருக்கிறது.

மகளிருக்கு ரூ.5 ஆயிரம் – மு.க. ஸ்டாலின் போடும் கணக்கு

குடும்பஸ்தர்களின் பரிதாப நிலை

ஏற்கனவே மாதம் 1000 ரூபாய் வந்தவுடனே மனைவியின் முகத்தில் ஒரு தனி பிரகாசம் வந்துவிடும், கணவன்மார்கள் முகம் சுருங்கிவிடும்.

“ஆஹா.. ஆரம்பிச்சிட்டாங்களா..” என ஏடிஎம் கார்டை தூரத்திலிருந்தே பார்த்து பெருமூச்சு விடும் நடுத்தர வர்க்கக் கணவன்மார்கள் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் மாஸ் காட்டுபவர்களும் உண்டு.

“இதோ பாரும்மா… உனக்கு அக்கவுண்ட்ல 5000 வந்துட்டதா ரொம்ப பெருமைப் படாதே! எனக்கு ஓட்டுக்கு அப்படியே கரகரன்னு ரொக்கமா வரும்… பாக்கிரியா” என சொல்லிக்கொண்டே, வடிவேலு பாணியில் டிராயருக்கு மேல் வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு மனைவியிடம் காலரைத் தூக்கிவிட்டு சவால் விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த ‘கவர்’ தேவதைகளுக்காக காத்திருக்கும் ஆண்களும், தீவிர பிரசாரப் பணியில் தினமும் பாட்டிலும், ஊறுகாயும் இருந்தால்தான் தூக்கமே வரும் என்று இப்பவே கொடி பிடிக்கும் ரகமும் இந்த TN Election 2026-ல் இன்னும் அதிகமாக இருக்கத்தான் செய்வார்கள்.

அதிமுகவின் பம்பர் ஆஃபர்கள்: சளைக்காத எடப்பாடி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் சளைத்தவர் அல்ல. ஆளுங்கட்சிக்கு செக் வைக்க பல அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகிறார்.

“நீங்க 2000 கொடுத்தா, நாங்க அதைவிட பெருசா தருவோம்” என TN Election 2026 களத்தை ஒரு தள்ளுபடி ஏலக்கடை ரேஞ்சுக்கு மாற்றிவிட்டிருக்கிறார்கள்.

நடுத்தர மக்களும் “எந்தக் கட்சி பெஸ்ட் ஆஃபர் கொடுக்கும்?” என தீபாவளி போனஸை எதிர்பார்ப்பது போல மிக ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளின் மெகா ஆஃபர்கள்

இது ஆன்லைன் நிறுவனங்கள் போட்டிப்போட்டு வழங்கும் ஃபெஸ்டிவல் ஆஃபர்களை விட படு பயங்கரமான போட்டியாக மாறி வருகிறது.

மக்களும் “எனக்கு இது பத்தாது, இன்னும் வேணும்” என வடிவேலுவின் ‘ஸ்வர்ணமுகி’ காமெடி போல எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டார்கள்.

இந்த TN Election 2026-ல் வாக்காளர்களைக் கவர நடக்கும் இந்த போட்டிதான், தமிழக அரசியலின் தற்போதைய Top Highlights ஆக அமைந்துள்ளது.

விஜய்யின் என்ட்ரி: சினிமா கவர்ச்சி எடுபடுமா?

இந்த இரண்டு பெரிய திராவிட திமிங்கிலங்களுக்கு நடுவே, “நா ரெடிதான் வரவா சண்டைக்கு” என மாஸ் என்ட்ரி கொடுக்கிறது புதிதாக பிறந்த மீன்குஞ்சு. அதுதான் தமிழக வெற்றிக் கழகம்.

தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசம், தியேட்டரில் நடக்கும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை விட அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது ஒருபுறம். மற்றொருபுறம், அதன் தலைவர் விஜயின், தாங்க முடியாத அலப்பறை.

இதனால், TN Election 2026-ல் விஜய்யின் வருகை, வழக்கமான அரசியல் ஃபார்முலாவை உடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு ஜென்-சி இளசுகளிடம் ராக்கெட் வேகத்தில் எகிறியுள்ளது.

“நான் அடிச்சா தாங்க மாட்ட…” டயலாக் போதுமா?

இளைஞர்கள் மற்றும் ரசிகர்களின் பலத்தை மட்டுமே நம்பி களமிறங்கும் விஜய், தேர்தல் நெருக்கடிகளை நிஜ அரசியலில் எப்படி தாக்குப்பிடிப்பார்?

பஞ்ச் டயலாக் பேசினால் மட்டும் அரசியலில் ஓட்டு விழுந்துவிடுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனாலும், இந்த TN Election 2026 களத்தில் விஜய் இணைந்திருப்பது, வழக்கமான தேர்தல் சலிப்பை மாற்றி ஒரு பெரிய சஸ்பென்ஸை உருவாக்கியுள்ளது. இது வாக்களிக்கப் போகும் தமிழக மக்களுக்கு மட்டமல்ல. அரசியல் கட்சிகளுக்கும்தான்.

விஜய்யின் அரசியல் வியூகம்

பணம் மற்றும் பெரிய அரசியல் பின்புலம் இல்லாத ஒரு புதுக்கட்சி, இந்த பண பலமிக்க மெகா கூட்டணிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

“என்னை வச்சு ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலையே” என நடுநிலை வாக்காளர்கள் குழம்பும் அளவுக்குத்தான் கள நிலவரம் தற்போதைக்கு உள்ளது.

இருப்பினும், மாற்று அரசியலைத் தேடும் மக்களின் வாக்குகள் TN Election 2026-ல் விஜய்க்கு ஒரு நல்ல அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

வாக்காளர் வீடுகளில் லட்சுமி தாண்டவம்!

தமிழகத் தேர்தல் என்றாலே ‘பணம்’ பேஸ்கட் பால் விளையாடும் என்பது சிறு குழந்தைக்குக் கூட தெரிந்த ஓபன் சீக்ரெட்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும், நள்ளிரவில் வீட்டின் கதவைத் தட்டும் அந்த ‘கவர்’ தேவதைகளுக்காக மக்கள் பாய் போட்டு காத்திருப்பார்கள்.

இந்த TN Election 2026-ல், இன்னும் சில மாதங்களுக்கு வாக்காளர் வீடுகளில் லட்சுமி கடாட்சம் வெறித்தனமாகத் தாண்டவமாடப் போவது மட்டும் உறுதி.

மிட்நைட் த்ரில்லர்

நள்ளிரவு இரண்டு மணிக்கு திடீரென கதவு தட்டப்படும் சத்தம் கேட்கும். தூக்கக் கலக்கத்தில் போய் கதவைத் திறந்தால் முகமே தெரியாத ஒரு உருவம் நிற்கும். “அண்ணே, நாங்கதான் அந்த …. கட்சியில இருந்து வர்றோம்” எனச் சொல்லிவிட்டு கையில் ஒரு கவரைத் திணித்துவிட்டு மறந்துடாதீங்க… மறந்துடாதீங்க.. என சொல்லிக்கொண்டே மாயமாக இருட்டில் மறையும் நள்ளிரவு ஆட்டம் எல்லா ஊர்களிலும் அரங்கேறும்.

“யாரு சாமி நீங்க?” என வடிவேலு போல முழிக்கும் முன்பே, அடுத்த வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கும். எட்டிப் பார்ப்பதற்குள் அந்த உருவம் இருளில் மறைந்து போகும். இதுதான் தேர்தல் சீஸன் ஸ்பெஷல்!

tn election 2026

“என் ஓட்டு என் உரிமை”: புதிய ட்ரெண்ட்

முன்பெல்லாம் அரசியல்வாதிகள் பணம் கொடுத்தால் “வேண்டாங்க… எனக்கு இந்த பாவமெல்லாம் வேணாம்” . உங்களுக்குத்தான் எங்க ஓட்டு… போய்ட்டு வாங்கன்னு கும்பிடு போட்டுவிட்டு ஒதுங்கிப் போகும் ஒரு தலைமுறை இப்போது பெரும்பாலும் காணாமல் போய்விட்டது.

“என்னப்பா 500 தானா? பக்கத்து தெருவுல 2000 குடுத்தாங்களே” என உரிமையோடு சட்டைப் பிடித்து சண்டை போடுவதும்”. யப்பா… நீங்கள் அந்த பாத்திரங்களை கொடுத்தபோது வெளியூர் போயிருந்தோம். அது எங்களுக்கு விட்டு போயிட்டு… சட்டுபுட்டுன்னு சீக்கிரமா எங்களுக்கு சேர வேண்டியதை கொண்டு வந்து தாங்க..ன்னு உரிமை கொண்டாடும் “ஜனநாயகன்”கள் வீதிதோறும் இப்போது அதிகரித்துவிட்டார்கள்.

“இது நமக்குச் சேர வேண்டிய பணம், நம்ம வரிப்பணம்தானே!” அவங்க சம்பாதிச்சதுல கொஞ்சம் தராங்க. இதுல என்ன தப்பு இருக்கு… போவ்யா… என ஒரு புது தத்துவத்தை TN Election 2026-ல் உதிர்க்கும் தத்துவ ஞானிகளின் எண்ணிக்கையும் நிச்சயமாக அதிகரிக்கும்.

உரிமையோடு கேட்கும் வாக்காளர்கள்

“அண்ணே, எங்களுக்கு டோக்கன் வரலையே…” என அரசியல் கட்சி ஆபீசுக்கே சென்று சண்டை போடும் அளவுக்கு மக்கள் இப்போது செம அப்டேட் ஆகிவிட்டார்கள். “நானெலாம் அந்த மாதிரி ஆளு இல்லப்பா” என்று சொல்வதெல்லாம் இப்போது வெறும் பழைய பிளாக் அண்ட் ஒயிட் சினிமா டயலாக்காகவே மாறிவிட்டது.

இந்த TN Election 2026-ல் வாக்காளர்களின் இந்த விநோதமான மைண்ட்-செட் தான் தற்போதைய அரசியல் யதார்த்தம்.

உள்ளூர் அரசியல்வாதிகளின் ‘பாசமழை’

உள்ளூர் கவுன்சிலர்கள் முதல் வட்டச் செயலாளர்கள் வரை இப்போது தொண்டர்களை “வாப்பா.. எப்படி இருக்க.. வீட்டில் எல்லாரும் சவுக்கியமா” என பாசமழை பொழிகிறார்கள்.

இத்தனை நாள் முகத்தைக் கூட காட்டாத இவர்கள், தேர்தல் வந்தவுடன் திடீரென ‘பாசமலராக’ மாறுவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

அவர்கள் என்ன தேர்தல் பணியில் ஆதாயம் இல்லாமலா இறங்குவார்கள்?. வாரி இறைப்பதில் கொஞ்சம் முதுகுக்கு பின்னால் தூக்கி போட்டு சேர்த்துக்கொள்ளும் தந்திரவாதிகள் ஆச்சே…

இத்தனையையும் கடந்து “ஆஹா, நம்மள ஏதோ பெரிய பிளான் பண்ணி உசுப்பேத்துறாங்களே” என வாக்காளர்களும் இந்த TN Election 2026-ல் மிகவும் உஷாராகவே வலம் வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் vs கட்சிகளின் ‘ஜீ பூம் பா’

சரி, வீதிக்கு வீதி நடக்கும் இந்த காந்தி கரன்சி விளையாட்டுகளை தேர்தல் ஆணையம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? என்ன?

கெடுபிடிகள் செய்யத்தான் செய்வார்கள். ஹெலிகாப்டர், ட்ரோன் எனப் பறந்து கெடுபிடி செய்வார்கள்; வழியில் போகும் வண்டிகளை மடக்கி டிக்கியை செக் செய்வார்கள்.

ஆனால், தேர்தல் பறக்கும் படைகளுக்கு தெரியாமல், கண்கட்டி வித்தை காட்டுவதில் நம் ஊரு அரசியல்வாதிகள் பிஎச்டி முடித்த கில்லாடிகள் ஆச்சே!.

பால் வண்டி, காய்கறி வண்டி, ஏன் ஆன்லைன் ஃபுட் டெலிவரி பேக்கில் கூட பணத்தை சப்ளை செய்யும் ‘ஜீ பூம் பா’ வித்தையை இவர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பது பாவம்… தேர்தல் ஆணையத்துக்கு தெரியாது.

“பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மெண்ட் வீக்கு” என வடிவேலு சொல்வது போல் தேர்தல் அதிகாரிகளையே விழிபிதுங்க வைப்பது அரசியல் கட்சிகளுக்கு கை வந்த கலைதான். இதில் ஒரு அரசியல் கட்சி கூட சோடை போனதில்லை.

அந்த வகையில், TN Election 2026-ல் தேர்தல் ஆணையத்தின் சிசிடிவி கேமராக்களுக்கே விபூதி அடிக்கும் டெக்னிக்குகளை கட்சிகள் இப்போதே தயார் செய்துவிட்டன. இப்போதே, கட்டுக்கட்டாக, போக வேண்டிய இடத்துக்கு போய் பத்திரமாக பதுங்கியிருக்கும்.

இனி பறக்கும் படையிடம் சிக்கப்போவது சொந்த செலவுக்கு காரில் எடுத்துச் செல்லும் பணம், வணிக நோக்கத்தில் உரிய ரசீது இல்லாமல் எடுத்துச் செல்லும் பணம் ஆகியவைதான்.

கலகலப்பான தேர்தல் திருவிழா

டிவி சேனல்களைத் திறந்தால் “நாங்கள் ஊழலற்ற ஆட்சியைத் தருவோம்” என தொண்டை தண்ணி வற்ற கத்துவார்கள் அரசியல்வாதிகள். ஆனால், கீழே நியூஸ் ஸ்க்ரோலிங்கில் “பறக்கும் படை சோதனையில் ரூ.10 கோடி சிக்கியது” என பிரேக்கிங் செய்தி ஓடிக்கொண்டிருக்கும். இதுதான் TN Election 2026-ன் நிஜமான நகைச்சுவை.


FAQ: TN Election 2026 பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் இதோ

TN Election 2026 எப்போது நடைபெறும்?

தமிழக சட்டசபைக்கான தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும்.

இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவின் முக்கிய வியூகம் என்ன?

மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவது ஆளுங்கட்சியின் மாஸ்டர் பிளானாக உள்ளது. அதே சமயம், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அதிமுகவும் பல கவர்ச்சிகரமான மாற்று வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஈர்க்கும் வியூகத்தை கையாள்கிறது.

விஜய்யின் கட்சி TN Election 2026 களத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும்?

தமிழக வெற்றிக் கழகம் (TVK) இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வழக்கமான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வாக்குப் வங்கியில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தேர்தல் பறக்கும் படை பணப்பட்டுவாடாவை எப்படி தடுக்கும்?

பணப்பட்டுவாடாவைத் தடுக்க சிசிடிவி கண்காணிப்பு, ட்ரோன் கேமராக்கள் மற்றும் தீவிர வாகனச் சோதனைகளை தேர்தல் ஆணையம் நடத்தும். டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும்.

இந்த தேர்தலின் Top Highlights என்ன?

அதிரடியான பணமழை, வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள், மற்றும் சினிமா கவர்ச்சியோடு களமிறங்கும் விஜய் ஆகியவைதான் TN Election 2026-இன் மிக முக்கிய Highlights ஆகும்.

சிவபெருமானின் திடீர் பூலோக விசிட் – நகைச்சுவை விடியோ

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளாகும். இது மித்திரன் செய்திகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை அல்ல.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *