🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

சி.என். அண்ணாதுரை: ஒரு வரலாற்று நாயகனின் Inspiring Journey

Read in English / பிற மொழிகளில் படிக்க:

அரசியல் என்பது இன்று எதிரிகளை உருவாக்கும் களமாக மாறிவிட்டது. ஆனால், அன்று அரசியல் என்பது கொள்கை மோதலாக மட்டுமே இருந்தது, தனிமனிதப் பகையாக இருந்ததில்லை. இதற்குச் சிறந்த உதாரணமாக, சி.என். அண்ணாதுரை தன் வாழ்நாளில் கடைபிடித்த ஒரு முக்கிய பண்பை ‘வரலாற்றில் இன்று’ பகுதியில் அசைபோடுவோம்.

சி.என்.அண்ணாதுரை

சி.என். அண்ணாதுரை காட்டிய நாகரிகம்

பொதுவாக ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தால், எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைப்பதுதான் வாடிக்கை. ஆனால், 1967-ல் ஆட்சியைப் பிடித்த சி.என். அண்ணாதுரை, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்குத் கொடுத்த மரியாதை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

காங்கிரஸ் கட்சியின் பக்தவச்சலம் தோல்வியடைந்திருந்த நேரம் அது. ஆனாலும், அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்ற பின்னரே அண்ணா அரியணை ஏறினார்.

அண்ணா என்னும் மூன்றெழுத்து

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

சி.என். அண்ணாதுரை எளிமையும், நேர்மையும் கொண்ட மிக எளிய வாழ்க்கையை வாழ்ந்தவர். உயர்ந்த பதவியில் இருந்தாலும் அவரிடம் ஆடம்பரம் காணப்படவில்லை.

அடுக்கு மொழி பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் சி.என்.அண்ணாதுரை. அவரை அண்ணா என்றும், அறிஞர் அண்ணா என்றும், தென்னாட்டு பெர்னார்ட் ஷா என்றும் எல்லோரும் அழைத்தனர்.

சி.என். அண்ணாதுரை தன்னுடைய அரசியல் எதிரிகளைக் கூட கடுமையாக விமர்சனம் செய்யாமல் மதித்து நடந்தவர். சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக ஆக்கியவர். இருமொழிக் கொள்கையை வலியுறுத்தியவர்.

இன்றைய சூழல் என்ன?

இன்று சட்டமன்றங்களிலும், பொது மேடைகளிலும் தலைவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் முகம் சுளிக்க வைக்கின்றன.

ஆனால், “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்று சொன்னவர் அண்ணா. மாற்றுக் கருத்துடையவரையும் மதிக்கும் அந்தப் பண்பு, இன்றைய தலைமுறையினரிடம் குறைந்து வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது.

எம்.ஜி.ஆரும் கருணாநிதியும்

அண்ணா வழியில் வந்த எம்.ஜி.ஆரும், கலைஞரும் கூட தனிப்பட்ட நட்பில் என்றுமே விரிசலுக்கு இடம் கொடுத்ததில்லை.

அரசியல் மேடையில் அனல் பறக்கப் பேசினாலும், நேரில் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் நலம் விசாரிக்கும் பண்பு இருந்தது. இது இன்றைய இளம் அரசியல்வாதிகள் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்.

வரலாறு என்பது வெறும் தேதிகள் மட்டுமல்ல; அது நாம் வாழ வேண்டிய முறையைச் சொல்லிக் கொடுக்கும் பாடம். அண்ணாவின் இந்த அரசியல் நாகரிகம், இன்றைய காலகட்டத்திற்கு மிகத் தேவையான ஒன்று. இதைத் தலைவர்கள் உணர்வார்களா?

இன்றைய அரசியல் களம்

இன்றைய அரசியல் களத்தில் விமர்சனங்கள் என்பது கொள்கை ரீதியானதாகவோ அல்லது மக்கள் நலன் சார்ந்ததாகவோ இல்லை.

பெருமளவில் தனிமனித தாக்குதல்களாகவே சுருங்கிவிட்டன. ஒரு தலைவரை மற்றொரு தலைவர் விமர்சிக்கும் போது, வார்த்தைகளில் நிதானமும், கண்ணியமும் தொலைந்துவிடுகின்றன.

சமூக வலைத்தளங்களில் ‘வைரலாக’ வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக, தரம் தாழ்ந்த சொற்களையும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களையும் வீசுவது இன்றைய அரசியலில் வாடிக்கையாகி விட்டது.

எதிராளியின் வாதத்தை தர்க்கத்தால் எதிர்கொள்ளாமல், வார்த்தைகளால் காயப்படுத்தும் போக்கு இன்றைய அரசியலில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அன்றைய மேடை நாகரிகம்

பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற ஆளுமைகளின் காலகட்டத்தில் ‘அரசியல் நாகரிகம்’ என்பது மிக உயர்ந்த இடத்தில் இருந்தது.

மேடைகளில் அவர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரானவர்களை மிகக் கடுமையாக விமர்சிப்பார்கள்; ஆனால் அந்த விமர்சனங்கள் அத்தனையிலும் ஆழமான கருத்தும், கூர்மையான நகைச்சுவையும், கண்ணியமும் இழையோடும்.

காமராஜரையும், ராஜாஜியையும் அவர்கள் விமர்சித்த விதத்தில் ஒரு இலக்கிய நயமும், பரஸ்பர மரியாதையும் இருந்தது.

இதைப் படித்தீர்களா? எம்.ஜி.ஆர். ஜெயலலிதா: 28 படங்கள்! அரசியல் வெற்றி ரகசியம்

மாற்றுக் கருத்தைக் கொண்டவர்களையும் தனிப்பட்ட முறையில் மதிக்கும் அந்தப் பண்பாடு, அவர்களது வாசிப்புப் பழக்கத்தாலும், கொள்கை பிடிப்பாலும் உருவானது.

கைத்தட்டலை நோக்கி நகரும் பேச்சுக்கள்

இன்று அந்த அரசியல் நாகரிகம் பெருமளவு காணாமல் போனது எதைக் காட்டுகிறது என்றால், சமகால அரசியல்வாதிகளில் பலரிடம் தத்துவார்த்தமான புரிதலும், ஆழமான வாசிப்பும் குறைந்துவிட்டதையே அப்பட்டமாகக் காட்டுகிறது.

எதிராளியின் கருத்தை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ளும் திறன் இல்லாததாலேயே, பலரும் மலிவான தனிமனித தூற்றல்களைக் கையில் எடுக்கிறார்கள்.

கொள்கை விவாதங்களை விட, உடனடியாக பார்வையாளர்களின் கைத்தட்டல்களையும், மலிவான விளம்பரங்களையும் தேடும் மனநிலைக்கு இன்றைய அரசியல் கலாச்சாரம் தள்ளப்பட்டிருப்பதே இந்த அரசியல் நாகரிக வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகவும் அமைந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்: தமிழகத்தை மாற்றிய அண்ணா: 56வது நினைவு நாள் சிறப்பு

தலைவர்கள் மட்டத்தில் வெளிப்படும் இந்த நாகரிகமற்ற விமர்சனங்கள், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் வன்மத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் விதைக்கின்றன.

“அரசியலில் எதிரிகள் இல்லை, மாற்றுக்கருத்து கொண்ட போட்டியாளர்கள் மட்டுமே” என்ற உயர்ந்த அரசியல் தத்துவம் இன்று முற்றிலும் மறக்கப்பட்டுவிட்டது.

கருத்து மோதல்கள் மாறி, பகைமை உணர்வுடன் கூடிய தனிப்பட்ட விரோதங்களாக அரசியல் களம் மாறிவருவது கவலையளிக்கிறது.

மீண்டும் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பின்பற்றிய அந்த கண்ணியமான விவாதப் பண்பாடு மீட்கப்பட்டால் மட்டுமே, வருங்காலத் தலைமுறையினருக்கு அரசியலின் மீது ஒரு நேர்மறையான பார்வை உருவாகும்.

இதை பார்த்தீர்களா? விஜய் அரசியல் பேச்சு Highlights | DMK vs BJP vs TVK 2026 தேர்தல்

சி.என். அண்ணாதுரை பிறந்த தேதி என்ன?

அவர் 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-இல் காஞ்சிபுரத்தில் பிறந்தார்.

சி.என்.அண்ணாதுரை கல்வி விவரம் என்ன?

அவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. (honours) மற்றும் எம்.ஏ. (பொருளாதாரம் மற்றும் அரசியல்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.

அண்ணா அரசியலுக்கு வரும்முன் என்ன செய்துகொண்டிருந்தார்?

அவர் அரசியலுக்கு வரும்முன் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பணிபுரிந்தார்.

அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு சுருக்கம் என்ன?

ஈ.வெ.ராமசாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக்கட்சியில் சேர்ந்தார். பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திமுகவை தொடங்கினார். 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை விரும்பினார். 1967-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து முதல்வரானார். தமிழ்நாடு என மெட்ராஸ் மாகாணத்துக்கு பெயர் சூட்டினார். இருமொழிக் கொள்கையை அமல்படுத்தினார். சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார். மலிவு விலை அரிசித் திட்டத்தை தொடங்கினார். சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் காரணமாக மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றார்.

சி.என்.அண்ணாதுரை நாடகங்கள் எவை?

அவர் ஏராளமான நாடகங்களை எழுதியிருக்கிறார். அவற்றில் முக்கியமானவை. வேலைக்காரி, ஓர் இரவு, நீதிதேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், சந்திரோதயம், கலப்பு மணம், அவன் பித்தனா, ரோம் எரிகிறது, கண்ணீர்துளி, இரக்கம் எங்கே, கல்சுமந்த கசடர், ராகவாயணம், காங்கிரஸ் வாலா, ஊரார் உரையாடல்.

சி.என்.அண்ணாதுரை எழுதிய புத்தகங்கள் எவை?

சி.என். அண்ணாதுரை 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், அரசியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவர்கள் புகழ்பெற்ற நூல்கள் சில: ஆரியமாயை, கம்பரசம், பணத்தோட்டம், மாஜி கடவுள்கள், ரங்கோன் ராதா, கலிங்கராணி, தசாவதாரம், குமரிக்கோட்டம்

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளாகும். இது மித்திரன் செய்திகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை அல்ல.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *