Read in English / பிற மொழிகளில் படிக்க:
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. ஆனால், ஆளும் தரப்போ திமுக கூட்டணி 2026 வெற்றிக்கான கணக்கை இப்போதே தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
தேர்தல் முடிவுகள் இப்போதே எழுதப்பட்டுவிட்டனவோ என்ற சந்தேகத்தை இன்றைய அரசியல் நகர்வுகள் எழுப்புகின்றன. அதற்குக் காரணம், அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவும் ஒரு உத்தேச தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல்.
இது வெறும் பட்டியல் அல்ல; தமிழக அரசியலில் ஒரு பூகம்பத்தையே உருவாக்கக் கூடிய அதிர்ச்சிகரமான தகவல்கள் இதில் அடங்கியுள்ளன. குறிப்பாக, திமுக கூட்டணி 2026 வியூகத்தில் எதிரணிகள் நிலைகுலைந்து போவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsதிமுக வகுத்துள்ளதாகச் சொல்லப்படும் இந்த ‘மாஸ்டர் பிளான்’, 234 தொகுதிகளையும் துல்லியமாகப் பிரித்து, கூட்டணி கட்சிகளுக்கு செக் வைப்பதாக அமைந்துள்ளது.
உள்ளடக்கம்
திமுகவின் மெகா டார்கெட்: 164 தொகுதிகள்
முதலில் இந்த எண்களின் அரசியலைப் புரிந்துகொள்வோம். திமுக தனக்காக ஒதுக்கியுள்ளதாகச் சொல்லப்படும் எண்ணிக்கை 164. ‘கூட்டணி ஆட்சி’ என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் இந்த எண்களின் மூலம் ஆணித்தரமாகச் சொல்லியிருப்பதாகவே தோன்றுகிறது.
ஒருவேளை கூட்டணிக் கட்சிகள் மிரட்டினாலோ, அல்லது தேர்தலுக்குப் பின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டாலோ, யாருடைய தயவும் இன்றி தனிப்பெரும்பான்மையோடு (Simple Majority) ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை.
ஆனால் திமுகவோ 164 இடங்களில் போட்டியிட்டு, குறைந்தது 130-லிருந்து 140 இடங்களை வென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அது தற்போதைய நிலையில் சாத்தியமாகும் வாய்ப்பும் திமுக கூட்டணி 2026-க்கு இருக்கத்தான் செய்கிறது.
இது திமுக கூட்டணி 2026 அமையப்போகும் விதத்தை தெளிவுபடுத்துகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு இது ஒரு மறைமுக எச்சரிக்கை. ‘நாங்கதான் ராஜா, நீங்கள் எல்லாம் படைவீரர்கள் தான்’ என்பதை நாசூக்காகச் சொல்லும் ராஜதந்திரம் இது.

தேமுதிக & பாமக: கூட்டணி தாவலின் பின்னணி
இங்கேதான் நாம் உற்றுநோக்க வேண்டிய முக்கிய மாற்றம் இருக்கிறது. முதலில் தேமுதிக. மதுராந்தகம் மோடி கூட்டத்தை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா ஏன் புறக்கணித்தார் என்பதற்கான விடை இப்போது கிடைத்துவிட்டது.
அதிமுகவிடம் அவர் கெஞ்சிக் கேட்ட அந்த ‘ராஜ்யசபா சீட்’, திமுக தரப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 6 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் என்ற டீலுக்கு தேமுதிக ஓகே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. அதனால் திமுக கூட்டணி 2026 தேமுதிகவும் அடங்கியதுதான் என்பதை ஓரளவுக்கு உறுதியாகச் சொல்லலாம்.
கேப்டன் விஜயகாந்த் இல்லாத சூழலில், கட்சியின் எதிர்காலத்தைக் காப்பாற்ற ஆளுங்கட்சியின் அரவணைப்பு தேவை என பிரேமலதா கருதுவதே திமுக கூட்டணி 2026 நோக்கி அவர் நகரக் காரணம்.
அடுத்ததாக, திமுக கூட்டணி 2026-இல் பாமக – ராமதாஸ் அணிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று பேசப்படுகிறது. இதுதான் மிகப்பெரிய திருப்பம். மகன் அன்புமணி பாஜக மேடையில் ஏறினாலும், தந்தை ராமதாஸ் திமுகவுடன் இணக்கமாகவே இருக்கிறார். அதனால் திமுக கூட்டணி 2026-இல் அவரும் பங்கேற்க வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
நான்கு இடங்கள் குறைவுதான் என்றாலும், பாமகவின் வாக்கு வங்கியை திமுக பக்கம் திருப்புவதன் மூலம், வட மாவட்டங்களில் அதிமுக-பாஜக கூட்டணியை முடக்குவதே இந்தத் திட்டம். இதன் காரணமாக திமுக கூட்டணி 2026 பிரம்மாண்ட வெற்றி பெறவும் வழிவகுக்கும்.
‘மகனோடு மோதும் ராமதாஸ், தேர்தலில் அந்த 4 இடங்களையும் பெற்றுவிட்டாலே போதும், அன்புமணி ராமதாஸ் கேம் ஓவர்’ என்று ஒரு பேச்சு ஓடுகிறது. ஆனால், இது தந்தை-மகன் ஆடும் நாடகமாகக்கூட இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் சந்தேகிக்கிறார்கள்.
சுருங்கிய காங்கிரஸ்: அதிருப்தியில் தோழர்கள்?
புதியவர்கள் உள்ளே வரும்போது, பழையவர்கள் வழிவிட்டுத்தானே ஆகவேண்டும்? அந்த அடி பலமாக விழுந்திருப்பது காங்கிரஸ் மற்றும் விசிக மீதுதான். திமுக கூட்டணி 2026 கணக்குப்படி காங்கிரஸுக்கு மீண்டும் அதே 25 இடங்கள்தான்.
‘தேசியக் கட்சிக்கு இது கௌரவக் குறைச்சல்’ என்று காங்கிரஸ் நினைத்தாலும், ‘எதிரணியில் உங்களுக்கு இடமில்லை, இதுதான் ஆஃபர்’ என்று திமுக கறாராகச் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.
இன்றையச் சூழலில் இந்த 25 இடங்களை முழுமையாக காங்கிரஸ் வெற்றி பெற முயற்சிப்பதுதான் புத்திசாலித்தனம். அதுதான் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.
அடுத்து விசிக. திருமாவளவன் இரட்டை இலக்கத் தொகுதிகளை எதிர்பார்க்கிறார். அத்துடன் பாமக ராமதாஸ் அணி இணைவதையும் உள்ளூர விரும்பவில்லை.
ஆனாலும், திமுகவை முறைத்துக் கொண்டு புதிய அணியான தமிழக வெற்றிக் கழக அணியில் சேரவும் அவருக்குத் தயக்கம். ஏற்கெனவே இவரை சுற்றலில் விட்ட ஆதவ் அர்ஜுனா இருக்கும் திசைக்கு அவர் திரும்ப விரும்பவில்லை.
எனவே, கௌரவமாக வெற்றிப் பாதைக்கு, திமுக அணியில் தரக்கூடிய அதே 6 இடங்களைப் பெற்றுவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்ற முடிவை திருமாவளவன் எடுக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்ட விசிக, இதற்கு உடன்படுமா என்பது சஸ்பென்ஸ்.
உதயசூரியனில் சிறிய கட்சிகள்
மதிமுக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கும் இதே நிலைதான். இவையும் தங்களுக்கு ஒதுக்கப்படும் தலா 6 இடங்களைப் பெற்றுக் கொள்வதுதான் பாதுகாப்பானது என்ற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம்.
திமுக கூட்டணி 2026 பட்டியலில் சிறிய கட்சிகளுக்கான ஒதுக்கீடும் மிகத் துல்லியமாக இருக்கிறது.
- மக்கள் நீதி மய்யம் (கமல்): 3 இடங்கள்.
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: 3 இடங்கள்.
- முஸ்லிம் லீக்: 3 இடங்கள்.
- மனிதநேய மக்கள் கட்சி: 2 இடங்கள்.
இதைத் தாண்டி திமுகவின் ‘மைக்ரோ மேனேஜ்மென்ட்’ எங்கே நிற்கிறது தெரியுமா? தனியரசு, வேல்முருகன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையார் போன்ற குறிப்பிட்ட சாதி செல்வாக்கு மிக்க தலைவர்களை, ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வைப்பது.
இதன் மூலம் இரண்டு லாபம்: திமுகவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டசபையில் கூடும். முக்குலத்தோர் மற்றும் வன்னியர் வாக்குகளைச் சிதறாமல் அப்படியே அள்ள முடியும்.
ஆக மொத்தம், 234 தொகுதிகளிலும் உதயசூரியனும், அதன் நட்புச் சின்னங்களும் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் ஒரு இரும்புக்கோட்டையை ஸ்டாலின் அமைத்துவிடுவாரோ என்றுதான் தோன்றுகிறது.
200+ உறுதி? சிதறும் எதிரணி!
இப்படியொரு மெகா கூட்டணியை, இத்தனை துல்லியமான கணக்குகளோடு திமுக கட்டமைக்கும் நிலையில், எதிரணிகளின் நிலை கொஞ்சம் பரிதாபமானதாகக் கூட ஆக வாய்ப்பு உள்ளது.
இப்போதைய நிலையில் அதிமுக அணியில் ஓபிஎஸ் சேர்க்கப்படவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். சில நாள்கள் முன்பு வரை டிடிவி தினகரன், எடப்பாடியை ஏற்க மாட்டேன் என்று முரண்டு பிடித்தவர், இப்போது திடீரென மாறியிருக்கிறார்.
ஆனால் இந்த மாற்றம் அதிமுக அணிக்குப் பலம் சேர்க்குமா என்றால்… சந்தேகம்தான். காரணம், தினகரன் முடிவை அவருடன் இருந்த நிர்வாகிகள் மட்டுமின்றி தொண்டர்களும் ஏற்கும் மனநிலையில் இல்லை.
இதனால் டிடிவி தினகரனின் வாக்குகள் அதிமுகவிற்கோ, அதிமுகவின் வாக்குகள் அமமுகவிற்கோ முழுமையாகச் செல்லாது. இதை நல்ல அரசியல் ஞானம் பெற்ற தினகரனும் அறிவார்.
பிறகு ஏன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர் இணைந்தார்? இப்போதைய சூழலில் தமிழகத்தில் பாஜகவுடன் அணி சேர்ந்திருக்கும் அதிமுக நிச்சயமாக ஆட்சி அமைக்க முடியாது.
அதனால், இப்போதைக்கு தன் மீதான வழக்குகளில் இருந்து தப்புவதற்கான கேடயமாக இந்த அணியைப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பதுதான் டிடிவி தினகரனின் கணக்காக இருக்கும்.
இந்தச் சூழலில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லி வருவது போல் திமுக கூட்டணி 2026 தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
திமுக கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகளின் எண்ணிக்கையில் வருத்தத்தைத் தெரிவித்தாலும், வெற்றிக்குப் பிறகு அந்த வருத்தத்தைப் போக்க மற்றொரு மாஸ்டர் பிளானை இப்போது மு.க.ஸ்டாலின் தயாரித்து வைத்திருப்பதாகவும் பேசப்படுகிறது.
ராமதாஸ் திமுக கூட்டணியில் 4 சீட்டுக்கு ஒப்புக்கொள்ள வாய்ப்பு உண்டா? காங்கிரஸ் கட்சி 25 சீட்டுகளுக்கு உடனடியாக ஓகே சொல்லுமா? விசிகவும், கம்யூனிஸ்டுகளும் அதே 6 இடங்களைப் பெற்றுக்கொள்வார்களா?
காலம் பதில் சொல்லும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, 2026 களம் திமுகவிற்கு சாதகமாகவே நகர்த்தப்படுகிறது.
திமுக கூட்டணி உடைகிறதா… விடியோ வடிவில் காண
தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக தமிழ்நாடு

தமிழக அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக அலசுவதில் நிபுணத்துவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஆர். ராமலிங்கம். 28 ஆண்டுகால கள அனுபவம் கொண்ட இவர், ‘மித்திரன் நியூஸ்’ இணையதளம் மற்றும் ‘Arasiyal Akkappore’, ‘RR Views and Facts’ யூடியூப் சேனல்கள் மூலம் அரசியல், கல்வி, அறிவியல் தகவல்களைத் துல்லியமாக வழங்கி வருகிறார்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்