அண்ணாத்த படப் பாடல் வெளியீடு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் முதல் சிங்கிள் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு வெளியானது.

எஸ்பிபியின் கடைசிப் பாடல்

மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இப்பாடலை பாடியுள்ளார். இதுவே அவர் இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஆர்வம்

இப்பாடல் படத்தின் முதல் தனிப்படலாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

அண்ணாத்த

சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,  “புகழ்பெற்ற பத்ம விபூஷன் திரு எஸ்பிபி பாடிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படம் ரஜினியின் 168-ஆவது தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இத்திரைப்படம் விரைவில் வெளிவர வருகிறது. அப்படத்தை காண அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இப்படம் தசரா பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிடப்பட்டது. பின்னர் மே 2020 சன் பிக்சர்ஸ் பொங்கல் பண்டிகையின்போது படத்தை வெளியிட திட்டமிட்டது.