ஒரு கடாயை குறைந்த அளவு தீயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, முள்ளங்கித் துருவல், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் கழித்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மூடி நன்றாக வேக விடவேண்டும்.
அதைத் தொடர்ந்து பன்னீர் துருவல், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து சீராக கிளறி இறக்கி வைக்கவும்.
முள்ளங்கியின் பயன்கள்
இதில் விட்டமின் சி.இ.பி6, ஃபோலேட்டுகள் அதிக அளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 ஆகியவையும் காணப்படுகின்றன.
தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவையும் உள்ளன.
இதை உண்ணும்போது குறைந்த அளவு எரிசக்தியுடன் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.
இக்காயில் நார்ச்சத்து, அதிக அளவு நீர்ச்சத்தும் இருக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் இக்காய் சேர்க்கப்பட்ட உணவை தொடர்ந்து எடுப்பது நல்லது.
இந்த காய் கல்லீரல், செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சை நீக்க உதவுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.
இரத்தத்தில் பிலிரூபினின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட கல்லீரல், பித்தப்பையை இக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சீர்செய்து கல்லீரல், பித்தப் பை செல்களை நன்கு செயல்பட ஊக்குவிக்கிறது.
சர்க்கரையுடன் ஏலக்காய், பட்டை சேர்த்து மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும்.
அரிசி மாவுடன் நெய் சேர்த்துக் கலக்கவும். இதுவே பதிர். மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
பிறகு மாவை ஆறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும். ஒரு சப்பாத்தியின் மீது சிறிதளவு பதிரைத் தடவவும். அதன் மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்துச் சிறிதளவு பதிர் தடவவும்.
அதன்மீது மீண்டும் ஒரு சப்பாத்தியை வைத்து பதிர் தடவவும். அடுக்காக வைத்த மூன்று சப்பாத்திகளையும் சேர்த்து, பாய் போல இறுக்கமாகச் சுருட்டவும்.
இதேபோல் மீதமுள்ள சப்பாத்திகளையும் தயாரிக்கவும். பிறகு, அதை ஒன்றரை இன்ச் அளவுள்ள துண்டுகளாக வெட்டிப் பூரிகளாகத் தேய்க்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துத் தேய்த்த பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். சூடாக இருக்கும்போதே பூரிகளின் மீது பொடித்து வைத்த சர்க்கரைத்தூளைத் தூவிப் பரிமாறவும்.
நாம் அன்றாடம் சமையலில் நம்மை அறியாமலேயே சில தவறுகளை செய்வதுண்டு. நாம் சில சமையல் குறிப்பு முறைகளை பின்பற்றினால் நம் சமையல் மேலும் சுவைபடும். இதோ உங்களுக்கான சமையல் குறிப்பு.
உள்ளடக்கம்
காய்கறிகள் – சமையல் குறிப்பு
காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.
காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.
கீரை, காய்கறிகள்
கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.
பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
சமையல் குறிப்பு – பூரிக்கு ஒரு மந்திரம்
பாலைத் திரித்து பன்னீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம். அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக இருக்கும்.
பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.
எலுமிச்சை சாதம்
எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
பச்சை நிறம் மாறாமல் கீரை சமைக்கலாம்:
கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.
தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும்.
இட்லி சுவைபட…
இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்… மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.
வாழைப்பூ:
வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.
தக்காளி சூப்
தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.
அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.
வடை தட்டும்போது…
துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்… சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.
கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள். பிரமாதமான சுவையில் இருக்கும்.
வித்தியாசமான ருசிக்கு…
வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.
பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்… பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.
சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.
சுவையான பிஸ்கட்
குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்… சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.
ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!
குழம்பு வாசம்
வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!
முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால், உடல் வலி குணமாகும்.
கமகமக்கும் சாம்பார்
மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து… சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.
எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்… சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.
பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்… நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.
ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்:
புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.
குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்… விரைவில் குணமாகும்.
தொண்டை கட்டிக்கொண்டால்… கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.
கூடாது … கூடாது ….
ரசம் அதிகம் கொதிக்கக் கூடாது. அப்படி கொதித்தால் சுவை குன்றிவிடும்.
காபிக்கு பால் நன்றாக காயக் கூடாது. அப்படி காய்ச்சினால் ஒருவித வாடையும், எண்ணெய் போன்று பாலில் மிதப்பதால் காபியின் சுவை மாறிவிடும்.
மோர்க்குழம்பு ஆறிப்போகும் வரை மூடி வைக்கக் கூடாது. இதனால் அதன் சுவை குறைந்துவிடும்.
கீரை சமைக்கும்போது
கீரைகளை மூடிப் போட்டு சமைக்கக் கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.
சூடாக இருக்கும்போது எலுமிச்சம் பழத்தை பிழியக் கூடாது. தக்காளி, வெங்காயத்தை ஒன்றாக வதக்கக் கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை வைக்கக் கூடாது.
பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய் நன்றாக காய்ந்திருக்கக் கூடாது.
தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு குழம்பு அதிகம் கொதிக்கக் கூடாது.
குலோப்ஜாமுன் பொரித்தெடுக்க நெய் அல்லது எண்ணெய் அதிகமாக காயக் கூடாது.
குழம்பு, பொரியல் ஆகியன அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி தழையை போடக் கூடாது.
சமையல் குறிப்பு விஷயத்தில் இது முக்கியம்
ஒவ்வொரு உணவு பொருளிலும் எவ்வளவு கலோரிகள் இருக்கின்றன என்பதை கணக்கிடுவது நம் உடல் நலத்துக்கு நல்லது.