சௌசௌ – வெள்ளைக் கடலை தயிர்க் கறி

வித்தியாசமான சமையல் குறிப்புகளில் நாம் இந்த பக்கத்தில் சௌசௌ – வெள்ளைக் கடலை தயிர்க் கறி செய்முறை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

நறுக்கிய SOWSOW துண்டுகள் – ஒரு கப்

ஊறவைத்து, வேகவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை – அரை கப்

தயிர் – கால் கப்

பச்சை மிளகாய் – ஒன்று

பச்சரிசி, துவரம் பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.

செய்முறை

SOWSOW-வை உப்பு சேர்த்து வேகவைக்கவும். அரிசியுடன் துவரம்பருப்பு சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

அதனுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

கொண்டைக்கடலையுடன் வேகவைத்த sowsow, அரைத்த விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பைச் சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு, கறிவேப்பிலை தாளிக்கவும். சௌசௌ ஆறியதும் தயிர், தாளித்த கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.