பதிர் பேணி செய்து சுவைத்து பார்க்கலாமே?

பதிர் பேணி ஒரு சுவையான உணவு. இதை வீட்டில் எப்படி செய்வது என்பது பற்றிய தகவலை நாம் இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

மைதா மாவு – 250 கிராம்

சர்க்கரை – 250 கிராம்,

அரிசி மாவு – 200 கிராம்,

நெய் – 200 கிராம்,

ஏலக்காய் 5

பட்டை சிறிய துண்டு ஒன்று

உப்பு – அரை டீ,ஸ்பூன்

பதிர் பேணி செய்முறை

சர்க்கரையுடன் ஏலக்காய், பட்டை சேர்த்து மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும்.

அரிசி மாவுடன் நெய் சேர்த்துக் கலக்கவும். இதுவே பதிர். மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.

பிறகு மாவை ஆறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும். ஒரு சப்பாத்தியின் மீது சிறிதளவு பதிரைத் தடவவும். அதன் மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்துச் சிறிதளவு பதிர் தடவவும்.

அதன்மீது மீண்டும் ஒரு சப்பாத்தியை வைத்து பதிர் தடவவும். அடுக்காக வைத்த மூன்று சப்பாத்திகளையும் சேர்த்து, பாய் போல இறுக்கமாகச் சுருட்டவும்.

இதேபோல் மீதமுள்ள சப்பாத்திகளையும் தயாரிக்கவும். பிறகு, அதை ஒன்றரை இன்ச் அளவுள்ள துண்டுகளாக வெட்டிப் பூரிகளாகத் தேய்க்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்துத் தேய்த்த பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். சூடாக இருக்கும்போதே பூரிகளின் மீது பொடித்து வைத்த சர்க்கரைத்தூளைத் தூவிப் பரிமாறவும்.