கடல் நீரை தேக்கி தயாரிக்கப்படும் உப்பு இயற்கையில் கிடைக்கும் சோடியம் குளோரைட் என்ற வேதிப் பொருள். இதை நாம் உணவில் சுவை கூட்டுவதற்காக பயன்படுத்துகிறோம்.
நாம் பயன்படுத்தக்கூடிய சாதாரண கல் உப்பு, பொடி உப்புகளில் அரசு விதிகளின்படி அயோடின் சேர்க்கப்படுகிறது
இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் பரிந்துரைப்படி ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 கிராம் உப்பு மட்டுமே உணவுப் பொருள்கள் வழியாக உட்கொள்ளலாம்.
பதப்படுத்தப்பட்ட பொருள்களில் அதிகமாக உப்பு சேர்க்கப்படுவதால், சராசரியாக நாம் 7 கிராம் உப்பு வரை நாள் ஒன்றுக்கு பயன்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
சந்தையில் லைட் சால்ட், ராக் சால்ட் கிடைக்கின்றன. ராக் சால்ட் என்பது பாறைகளைக் குடைந்து எடுக்கப்படுவது. இதில் கால்சியம், மெக்னீசியம் தனிமங்கள் கலந்திருக்கும்
லைட் சால்ட்டில், சோடியம் குறைக்கப்பட்டு, பொட்டாசியம் சேர்க்கப்படுகிறது. இதை மருத்துவர் அல்லது உணவியல் நிபுணர்கள் ஆலோசனை இன்றி சாப்பிடக் கூடாது.
உப்பு அதிகமாக உட்கொள்வதால் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஏற்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு உப்பின் அளவை குறைவாகக் கொடுத்து பழக்க வேண்டும். இதனால் அவர்களின் சுவை உணர்வு அதற்கேற்ப மாறிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.