இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!

காலனித்துவ ஆட்சி என்று அழைக்கப்படும் பிரிட்டீஷ் ஆதிக்கம் 1757-ஆம் ஆண்டு பிளாசி போருக்கு பிறகு இந்தியாவில் தொடங்கியது.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

பல்வேறு போர்களின் மூலம் கிழக்கிந்திய கம்பெனி் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா வந்தது. அதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் 89 ஆண்டுகள்  (1858-1947) ஆண்டார்கள்.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மங்கள் பாண்டே. இவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ராணுவ சிப்பாய்.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

1857 மார்ச் 29-இல் கொல்கத்தாவை அடுத்த பாரக்பூரில் பசு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய புதிய தோட்டாக்களை பயன்படுத்த மறுத்து கலகம் செய்தார்.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

அவர் உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்களின் கிளர்ச்சிக்கு தொடக்கமாக அமைந்தது..

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

இதனால் மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார். இதுவே முதல் சுதந்திரப் போராட்டமான சிப்பாய் கலகம் என வர்ணிக்கப்படுகிறது.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

ஆனால் வரலாற்று பதிவின்படி, 1806 ஜூலை 10-இல் தென்னிந்தியாவில் நடந்த சிப்பாய் புரட்சியே உண்மையில் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சி என்கிறார்கள்.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

ஆங்கிலேய படை தளபதி ஜான் ரடாக் சிப்பாய்களுக்கு மாட்டுத் தோல் மற்றும் பன்றித் தோலால் செய்யப்பட்ட தொப்பிகளை அணிவிக்க கொடுத்ததால் இந்த கிளர்ச்சி எழுந்தது.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகள் பெரும்பாலோரை சுட்டுக் கொன்று வேலூர் கோட்டையை கைப்பற்றினர்.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

இருப்பினும் சென்னை மற்றும் ராணிப்பேட்டையில் இருந்து வேலூர் நோக்கி வந்த ஆங்கிலேயப் படைகள் அந்த புரட்சியை ஒடுக்கின.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

இந்தியாவின் இளைய சுதந்திர போராட்ட வீரராக 17 வயதுடைய சுனக்லதா பருவா அறியப்படுகிறார்.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

இவர் 1924-இல் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார்.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

இவர் தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றபோது பிரிட்டிஷ் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு 150 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டானிய கிழக்கிந்திய நிறுவனங்களை எதிர்த்தவர்கள் தமிழகத்தில் பலர் உண்டு.

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

அழகு முத்துக்கோன், பூலித்தேவன், முத்துராமலிங்க சேதுபதி, வேலு நாச்சியார், மருது பாண்டியர், கட்டபொம்மன், வாளுக்கு வேலி அம்பலம் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்..

இந்திய சுதந்திர வரலாற்றில்  தடம் பதித்தவர்கள்

தற்போது நாடு தன்னுடைய 78-ஆவது சுதந்திர தினத்தை (15.8.24) கொண்டாடுகிறது.

இத்தருணத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மறைந்த அடையாளம் தெரிந்த மற்றும் அடையாளம் தெரியாத பல்லாயிரக்கணக்கான வீரர்களின் தியாகத்தை போற்றுவோம்.