பூண்டில் பலவித வைட்டமின்கள்கள், தாதுக்கள் என பல்வேறு ஊட்டச் சத்துக்கள் உள்ளன. இதனால் இது மருத்துவ குணம் பெற்று மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
பூண்டு ரத்த வெள்ளை அணுக்கள் செயல்பாட்டை அதிகரிக்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. செரிமான கோளாறுகளை சீர்செய்கிறது. நச்சுக்களை வெளியேற்றும்.
பூண்டை இரு வாரத்துக்கு தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதய தசைநார்களுக்கு வலிமை சேர்க்கும்.
தேனில் ஊற வைத்த பூண்டு, கல்லீரல், குடல் செயல்பாட்டை மேம்படுத்தும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும்.
பாலில் பூண்டை சேர்த்து நன்கு காய்ச்சி தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்கு வரும்..
தினமும் காலையில் வெறும் வயிற்றில், 5 பல் பூண்டு, பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், தொப்பையை கரைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
உடலில் ரத்தத்தை சுத்தம் செய்வதற்கு வெதுவெதுப்பான நீரில் 2 பல் பூண்டு, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் போதும்.
பூண்டு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை அரைத்து தூள் செய்து பசும்பால் விட்டு வேக வைத்து, பனங்கல்கண்டை சேர்த்து கஞ்சிபோல் பதத்தில் சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்னை தீரும்.
பல்வலி வந்தால், உடனடி நிவாரணியாக பூண்டை பயன்படுத்தலாம். ஒரு பல் பூண்டை நறுக்கி வலி இருக்கும் பல்லின் கீழ் வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு பூண்டு அலர்ஜியை ஏற்படுத்துவதும். தலைவலி, கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் பூண்டை பயன்படுத்தும்போது தோன்றினால் அதை தவிர்ப்பது நல்லது.