கோகுலாஷ்டமி

ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி ரோஹிணி நட்சத்திரம் அன்று பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள். இந்த நாளை ஹிந்துக்கள் கோகுலாஷ்டமி என்று அழைக்கிறார்கள்.

கோகுலாஷ்டமி

கிருஷ்ண ஜெயந்தியை சிலர் ஜன்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்ற பெயரில் ஒரு நாளும், சிலர் ஸ்ரீஜயந்தி அல்லது கிருஷ்ண ஜெயந்தி என்று ஒரு நாளும் கொண்டாடுவதும் உண்டு.

கோகுலாஷ்டமி

நல்ல இருள் சூழ்ந்த நேரத்தில் பெருமாள் தோன்றினாராம். அதனால் கோகுலாஷ்டமி நாளில், நள்ளிரவில் பெருமாளை வழிபடுவது சிறப்பு என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

கோகுலாஷ்டமி

வீட்டில் நள்ளிரவு நேரத்தில் வழிபட முடியாதவர்கள் மாலை நேரத்தில் வழிபடலாம். அத்துடன் வீட்டில் சாளக்கிராமம் இருந்தால், அதற்கு பூஜை செய்வதும் அவசியம்.

கோகுலாஷ்டமி

ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுவதற்கு மந்திரங்கள் தேவையில்லை. அவரவருக்கு தெரிந்த முறைகளில் பூஜையை செய்யலாம். கிருஷ்ணரை கொண்டாடுவதில் ஆத்ம சுத்தி மட்டுமே முக்கியம்.

கோகுலாஷ்டமி

கிருஷ்ண ஜெயந்தி அன்று பலவிதமான பட்சணங்களை செய்து வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

கோகுலாஷ்டமி

பட்சணங்கள் செய்ய இயலாதவர்கள் குறைந்தபட்சம் அவல், வெண்ணெய் வைத்து கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

கோகுலாஷ்டமி

வீட்டில் பூஜை நேரத்தில் குழந்தைகளை அமர வைத்து அவர்களை அடுத்துவரும் ஸ்லோகத்தை சொல்ல வைப்பது இன்னும் விசேஷம் என்கிறார்கள் பெரியோர்கள்.

கோகுலாஷ்டமி

வந்தே பிருந்தாவண சரம் வல்லவீ ஜன வல்லபம் ஜயந்தீ சம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம் என்பதுதான் அந்த ஸ்லோகம்.