புற்றுநோயைத் தடுக்க சில வழிகள்!

மனிதனை அச்சுறுத்தும் ஆபத்தான நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இருந்து வருகிறது..

புற்றுநோயைத் தடுக்க சில வழிகள்!

பொதுவாக, தொண்டை, மார்பகம், இரைப்பை, கல்லீரல், கர்ப்பப்பை வாய் உள்பட உடலின் பல பகுதிகளில் கட்டிகள் ஏற்பட்டு புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.

புற்றுநோய்க்கான சரியான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை. மனஅழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை கூட புற்றுநோய்களுக்கு காரணமாக இருக்கின்றன என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

புற்றுநோயைத் தடுக்க சில வழிகள்!

இதனால் சில அம்சங்களை பின்பற்றுவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை தவிர்க்கலாம். வைட்டமின், தாதுக்கள், நோய் எதிர்ப்பு  சக்தியுடைய காய்கறிகள், பழங்களை தொடர்ந்து சாப்பிட பழக வேண்டும்.

புற்றுநோயைத் தடுக்க சில வழிகள்!

இது வாய், தொண்டை, நுரையீரல், வயிறு பகுதிகளில் புற்று நோய் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. .

புற்றுநோயைத் தடுக்க சில வழிகள்!

நாள் தவறாமல் உடல் பயிற்சி செய்வது அவசியம். இதனால் உடல் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அடையும். ஹார்மோன்கள் சுரப்பில் சமநிலை பேண உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .

புற்றுநோயைத் தடுக்க சில வழிகள்!

வாரம் குறைந்தபட்சம் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்வோருக்கு மார்பகம், பெருங்குடல், கருப்பை வாய் புற்றுநோய் அபாயம் நீங்கும் .

புற்றுநோயைத் தடுக்க சில வழிகள்!

மதுபானங்களை உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். மதுபானங்கள் உணவுக்குழாய், மார்பகம், கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. .

புற்றுநோயைத் தடுக்க சில வழிகள்!

புகையிலையை எந்த வகையிலும் பயன்படுத்துவது கூடாது. இது வாய், தொண்டை, நுரையீரல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது. .

புற்றுநோயைத் தடுக்க சில வழிகள்!

40 வயதைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.  இதனால் ஆரம்பகால நோய் பாதிப்பை கண்டறிந்து குணப்படுத்த முடியும். .

புற்றுநோயைத் தடுக்க சில வழிகள்!