கங்கைகொண்டசோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம். இது சென்னை-கும்பகோணம் சாலையில் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது

கங்கைகொண்டசோழபுரம்

கிபி 1023-இல் கங்கையை ராஜேந்திர சோழன் வெற்றி கொண்டான். அதன் நினைவாக 1027-இல் கங்கைகொண்ட சோழபுரம் என்ற பெயரில் இந்த இடத்தில் தலைநகரை உருவாக்கினான்.

கங்கைகொண்டசோழபுரம்

அதற்கு முன்பு வரை  சோழ நாட்டின் தலைநகராக தஞ்சாவூர் இருந்தது. கங்கைகொண்ட சோழபுரம் சுமார் 250 ஆண்டுகள் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கியது.

கங்கைகொண்டசோழபுரம்

இங்கு ராஜேந்திர சோழன் எழுப்பிய பிரம்மாண்ட கோயில்தான் கங்கைகொண்ட சோழீஸ்வரம் திருக்கோயில்.

கங்கைகொண்டசோழபுரம்

இக்கோயில் அழகிய வேலைப்பாடுகளையும், கலைநயமிக்க சிற்பங்களையும் கொண்டிருக்கிறது. இதை ஐக்கிய நாடுகள் சபை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது.

கங்கைகொண்டசோழபுரம்

இக்கோயிலை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர்.